காகித பூ

நான் கொடுத்த
காதல் எனும் ஒரு மலரை
பூசுடி வந்தால்
அப்புதுமலரின் நறுமணத்தில்
மெய்மறந்து நின்றால்
நாட்கள்பல சென்றபின்னே
வாடிய அம்மலரிலே
வீசாத நறுமணத்தால்
எறியப்பட்டது குப்பையிலே
என் மனமோ தவித்தது
அம்மலரென வாடி
அவள் மனமோ சென்றது
புதுமலரை நாடி .........

எழுதியவர் : (15-Mar-14, 7:29 am)
Tanglish : kaakitha poo
பார்வை : 65

மேலே