அட பணமே

கிழிந்த உடையிலும்
குதூகலத்தில் ஏழைக்குழந்தை,
மண்ணில் புரள்கிறது
மகிழ்ச்சியில்..

பணக்காரக் குழந்தை
பயத்தில்-
புதுச்சட்டை கசங்கிடுமாம்,
பெற்றதாய் திட்டுவாளாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Mar-14, 7:26 am)
பார்வை : 97

மேலே