இதயத்தின் ஓசை

அன்பே..!
உன் பாசத்திற்கு வசப்பட்டு
என் இருதயத்திற்கு கால்கள் முளைத்து
உன் காலடியில் விழுந்துவிட்டது
அதை நீ கையில் ஏந்தினால்
நான் உயிருடன் வாழ்வேன்
காலால் மிதித்தால் கல்லறைக்கு செல்வேன்
அங்கு சென்றும்
என் உடல் மட்டும்தான்
மண்ணோடு மண்ணாகும்
ஆனால்....
ஆண்டாண்டு காலம்
உன் பெயரை உச்சரித்துக் கொண்டேதான் இருக்கும்
இப்படிக்கு ,
என் இதயம்