ஏழை காதல் + என் அன்னைக்காக

ஏழைக்கு காதல் வரக்கூடாது என்பார்கள் ! ஆனால்,
ஏழைக்கு காதல் கூட வரலாம், காதல் தோல்வி வரவே கூடாது ....
உயிராக நினைத்தவள்
உதறிச் சென்ற பின்னே,
உயிர் கொடுத்தோருக்கு
உண்டி அளிப்பதா ?
உணர்வுகளை கொன்றவளுக்கு,
உயிர் கொடுப்பதா ?
உயிர் கொடுத்தோருக்கு உணவு அளிக்க,
உயிரற்ற உடலாக வாழத் துணிந்தேன் !
மணக்கவும் முடியாமல்,
மறக்கவும் முடியாமல்,
மரிக்கவும் முடியாமல் நகரும் நிமிடங்களில்,
உயிர் கொடுத்த போது என் அன்னை பெற்ற வலியினை என்னுள் உணர்கிறேன் !
எனக்காக என் அன்னை தாங்கிய வலியை,
என் அன்னைக்காக நான் தாங்க,
நரகத்தில் நிமிடங்கள் நாட்களாக நகர்கின்றன ...
இந்த வலி யாருக்கும் வரக் கூடாது...