கவிஞனுக்கு பெண்பாற் சொல் ஒரு விளக்கம் கவின் சாரலன்

அன் விகுதி ஆண் பாலிற்கும் அள் விகுதி பெண் பாலிற்கும்
ஒருவன் ----ஒருத்தி --சரி ஒருவள் ---சரியில்லை ஆனால் பயன் படுத்தலாம்.
தோழன் ---தோழி
நண்பன்---பெண்பாற் நிகர் சொல் இல்லை நண்பி என்று சிலர் சொல்கிறார்கள். ஏற்கலாம்
ஆண்டாள் ஔவை சங்ககாலத்தில் மிகச் சிலரே தமிழின் நீண்ட இலக்கிய வரலாற்றில் பெண்பாற் கவிஞர்கள்
கவி என்பது வடமொழிச் சொல் கவிதா விலிருந்து கவிதை உருவாகியிருக்கும் . கவி என்பது கவிதை கவி இரண்டையும் குறிக்கும் . அவர் ஆசு கவி.. ஆனால் பால் பாகுபாடு இல்லை..

அவள் ஒரு கவி
விழியினில் மலர்
இதழினில் தேன்
கவி சொல்லுவதெல்லாம்
தமிழ்த் தேன் கவி.
---ஆணுக்கும் இன்னொன்று என்று சொல்லலாம்
கவிஞள் என்று சொன்னால் என்ன ? கவிதையில் சொல்லிப் பார்ப்போம் .

அவள் ஒரு கவிஞள்
காந்தள் மலரினள்
காதல் மொழியினள்
கூந்தலில் மல்லிகை சூடுவாள்
தேனிதழால் செந்தமிழ் பாடுவாள் !
---பழகப் பழக ஏற்புடையதாகலாம்
கவிஞை என்ற சொல் மிகப் பொருத்தமானது காரணத்துடன்இந்தச் சொல்லை அமைத்து எனது கவிதைகளிலும் கருத்துக்களிலும் பெண்பாற் கவிஞர்களை விளிப்பதற்கு அச்சொல்லைப்
பயன்படுத்தி வருகிறேன் .

கவிஞை அவள்
கற்பனைத் தோகையவள்
சொற்களின் சிற்பியவள்
அற்புதக் கவிஞையவள்
ஆனந்தத் தென்றலவள்
அந்தியின் கவிதையவள்
அன்புக் கவிஞையவள்
அழகிய தமிழ் மகள்
எந்தன் நெஞ்சில்
விரியும் எழுத்து அவள் !

சங்க காலம் தொட்டு தமிழ் இலக்கியங்களில்
பெண்பாற் புலவர்கள் எண்ணிக்கை அதிகம்
இல்லை . நால்வகைப் பண்புகளில் பெண்களை
அடக்கி ஆறாம் அறிவுக்கு சிறையிட்டு
விட்டார்களோ ? தெரியவில்லை
புலவனுக்கு பெண்பால் எது ?
அண்மை நூற்றாண்டுகளிலே குறிப்பாக
இருபதாம் நூற்றாண்டிலிருந்து பெண்கள்
அதிகம் எழுதத் துவங்கினர். பெண் கல்வி
வளர வளர கூண்டுக் கிளி வாழ்க்கையிலிருந்து
சுதந்திர வானில் சிறகு விரிக்கத் தொடங்கினர்
பெண்கள். கவிதைகள் பிறந்தன . கவிஞைகள்
இலக்கிய வீதியில் நடந்தனர் . வாழ்க !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Mar-14, 9:51 pm)
பார்வை : 2060

மேலே