பொட்டுக் கடலை சாம்பார்

தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை ஒருகைப்பிடி
பெரிய வெங்காயம் ஒன்று நறுக்கியது
தக்காளி இரண்டு நறுக்கியது
அரை டீஸ்பூன் மிளகாய்தூள்
ஒருடீஸ்பூன் மல்லித்தூள்
மஞ்சத்தூள் தேவைக்கு
எண்ணெய் தேவைக்கு
கருவேப்பிலை கொத்தமல்லி உப்பு தேவைக்கு

செய்முறை:

பொட்டுக்கடலையை ஒருகைப்பிடி எடுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாய்வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் சேர்த்து பொரிந்ததும்
வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி இதனுடன் மிளகாய்தூள் மல்லித்தூள் மஞ்சத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி கொஞ்சமாக நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும் இப்போது பொட்டுக்கடலை மாவை இரண்டு ஸ்பூன் எடுத்து
ஒரு கிண்ணத்தில் போட்டு இதில் கொஞ்சமாக நீர் விட்டு கரைத்து இந்த கலவையில் சேர்க்கவும் கொதிவந்ததும் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து உப்பு காரம் பார்த்து அடுப்பை நிறுத்தவும்
குறிப்பு: இது திடீர் சாம்பார் இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்றது.

எழுதியவர் : வே.புனிதாவேளாங்கண்ணி (15-Mar-14, 7:39 pm)
பார்வை : 216

மேலே