காமராஜர்- வாழ்க்கை வரலாறு
முன்னுரை
"கல்விக்கண் திறந்த முதல்வர்"
என்றழைக்கப்படும் பெருந்தலைவர் காமராசர் விருதுநகரில், 1903 ஆம் ஆண்டு குமாரசாமி, சிவகாமி இணையருக்குப் பிறந்தவர். நாட்டாண்மைக் காரக் குடும்பத்தில் பிறந்து இளம் வயதிலிருந்தே பல பஞ்சாயத்துகளைக் கண்டு வளர்ந்தவர். அவரின் சாதனைகளைப் பற்றி இவண் காண்போம்.
இளமைக் கல்வி
திண்ணைப் பள்ளியில் நடுநிலை வரை கற்றார். பின் கல்வி, உணவு ஆகியவை வழங்கப்பட்ட உயர்நிலைப் பள்ளியில் கற்றார். விடுதலைப் போராளிகள் சிலரின் கூச்சலை கவனித்தார். அவர்கள் கூறிய "வந்தே மாதரம்" என்னும் மந்திரம், காமராஜரின் மனத்தில் ஆழமாகப் பதிந்து, விடுதலை உணர்வை அவருள் ஊட்டியது. அனால், குடும்பத் துன்பம் காரண்மாகப் பள்ளியிலிருந்து விலகினார். எனினும், நூலகங்களுக்குச் சென்றும், செய்திதாள்களைப் படித்தும், அரசியல் கட்சித் தலைவர்களின் உரையைக் கேட்டும் திறமைகள் பலவற்றை வளர்த்துக்கொண்டார்.
அரசியல் ஈடுபாடு
இளமையிலேயே காங்கிரசுக் கட்சியில் தொண்டராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். கட்சிப்பேரணிகளில் கலந்து கொண்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவரது அளவற்ற தேசியப்பற்றைக் கண்ட கட்சித்தலைவர்கள், காமராஜரைக் கட்சிச் செயலாளராக நிர்ணயித்தனர். 1939 ஆம் ஆண்டில் தமிழகக் காங்கிரசுக் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். மிகுந்த செல்வாக்குப் பெற்றதால், இராமசாமி, பிரகாசம் முதலியவற்களை முதலமைச்சராக்கினார்.
முதலமைச்சர்
1954 ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பதவி ஏற்றார். மக்கள் மனங்களில், சிறப்பான இடத்தைப் பெற்றார். எண்ணிலடங்கா நற்திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.
தொழில் முன்னேற்றம்
இவர் காலத்தில் மூன்று முறை ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தொழிலமைச்சர் வெங்கட்ராமன் அவர்களின் துணையுடன் பொருளியல் தொழில்துறைத் திட்டங்கள் மிகுந்தன. மின் திட்டங்கள், சாலை திட்டங்கள் ஆகியவை மிகுந்தன. கிண்டி, அம்பத்தூர், பெருந்துரை போன்ற தொழிற்பேட்டைகளில் பல தொழில்கள் செய்யப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. பயிர்களுக்குப் பாசன வசதிகள் செய்யப்பட்டன. கூட்டுறவுச் சங்கங்கள் அனைத்து சிற்றூர்களிலும் பேறூர்களிலும் அமைக்கப்பட்டன. அணைகள் கட்டப்பட்டன.
நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை; போட்டோ பிலிம் தொழிற்சாலை, கிண்டி அருவைச்சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை, சருக்கரை ஆலை, சோடா உப்புத் தொழிற்சாலை, பெரம்பூர்த் தொடர்வண்டிப்பெட்டித் தொழிற்சாலை முதலியவை அமைக்கப்பட்டன.
கல்வி முன்னேற்றம்
"கல்விக்கண் திறந்த கர்மவீரர்"
என்பதற்கேற்ப கட்டாயக் கல்வி நடைமுறைப் படுத்தப்பட்டதுடன், அனைத்து ஊர்களிலும் தொடக்க, மேனிலை, உயர்நிலைப் பள்ளிகளும் கட்டப்பட்டன. பள்ளி நாட்கள் உயர்த்தப்பட்டன. மதிய உணவுத்திட்டம், சத்துணவுத் திட்டம் முதலியன் கொண்டுவரப்பட்டன. பள்ளிகள் ஒழுகல், இடிதலின்றி சீரமைக்கப்பட்டன. அனைத்துப் பள்ளிகளுக்கும் நங்கொடைகள் கொடுக்கப்பட்டன. இலவசக் கல்வி, மடிக்கணினி, புத்தகங்கள், புத்தகைப்பைகள், மிதிவண்டி முதலியவை கொடுக்கப்பட்டன. அரசுக் கல்லூரிகள் மிகுந்தன. கல்வித்தறமும் உயர்ந்தது. கல்விக்கடன் கொடுக்கப்பட்டது.
காமராசர்த் திட்டம்
காங்கிரசுக் கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்த, மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் எனக் காமராஜர் வலியுறுத்தினார். அத்திட்டமே காமராசர் திட்டம் எனப்பட்டது.
இந்தியக் காங்கிரசுத் தலைவர்
நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரின் மறைவுக்குப்பின், தலைவர் பதவியைக் காமராஜர் ஏற்றுக்கொண்டார்.நாடாளுமன்றங்களில் புதுத் திட்டங்களைக் கொண்டு வந்தார். தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்களை இந்திய அளவிலும் செயல்படுத்தினார். பாரத ரத்னா விருது பெற்றார். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தைத் திரந்தார்.
மறைவு
"நாடெங்கும் சோகம், நல்லோரின் பிரிவில்"
நம் தலைவர், மக்கள் நாயகர் 1975 ஆம் ஆண்டில் அக்டோபர் இரண்டு, காந்தியடிகளின் பிறந்த நாளன்று மறைந்து போனார். இன்றளவும், அவரால் இயற்றப்பட்டத் திட்டங்களால் பயன்பெற்ற மக்கள் அவருக்கு நன்றி கோரி வாழ்கின்றனர்.
முடிவுரை
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்."
என்பதற்கேற்ப, வாழும் பொழுதே ஏழைப்பங்களாராகவும், கர்மவீரராகவும், தன்னலமற்ற தலைவராகவும், கல்விக்கண் திறந்த முதல்வராகவும் புகழ்மிக்க வாழ்ந்த காமராஜர், தமிழகத்தை ஆண்ட மன்னனும், கல்வித்தந்தையும், இந்தியாவின் வழிகாட்டியும், கட்சிக்கு உயிர் கொடுத்தவரும் ஆவார். ஆகையால், அவரது நோக்கத்தை அறிந்து, நாட்டை உயர்த்துவோமாக!
"வாழ்க பாரதம்" "வெல்க தமிழ்"