நலந்தானா நலந்தானா டாக்டர் எம்கேமுருகானந்தன் MBBSCey, DFM Col, FCGP SL -- குடும்ப மருத்துவர்

தனிமையை விட தனிமையுணர்வு வாழ்வை நரமாக்கிவிடும்

, கூட்டுக் குடும்பமாக அம்மா அப்பா பாட்டன் பாட்டி என வாழ்ந்த காலங்கள் மலையேறிப் போய்விட்டன. இப்பொழுதோ பேசுவதற்கும் துயர்களைப் பகிர்வதற்கும், இன்பங்களைக் கூடிக் கொண்டாடுவதற்கும் முடியவில்லை. கோபிப்பதற்கும் திட்டுவதற்கும் கூட ஆளில்லாது துன்பப்படும் பலரை இப்பொழுது காணக் கூடியதாக உள்ளது. நவீன வாழ்வில் வசதிகளுக்குக் குறைவில்லை. எல்லாமே வீட்டிற்குள் கிட்டும். ஆனால் பேசுவதற்கு ஆள்தான் கிட்டாது. கணவன் மனைவி ஓரிரு பிள்ளைகள். ஓவ்வொருவருக்கும் அவரவரது பாடுகள். கணனி அல்லது தொலைகாட்சிப் பெட்டி முன் உட்காருவதுதான் நாள் முழவதும் வேலை. உலகையை உள்ளங்கையில் அடக்கும் தொலைபேசிகளும் இப்பொழுது வந்துவிட்டன. உள் அறையில் உலகத்தைச் சுற்றி வரலாம். ஆனால் உள்ளுறையும் உள்ளத்தைத் தொடுவதற்கு யாருமே இல்லாமல் போய்விட்டது. இதுதான் தனிமை. ஆம், தனிமை என்பது கொடுமையானது. அது ஓரிருவருக்கானது மாத்திரமல்ல, ஒரு உலகளாவிய பிரச்சனையாக உருவாகி வருகிறது. தனிமையென்பது எப்பொழுதுமே ஒரே மாதிரியானது அல்ல. ஆளுக்கு ஆள் மாறுபடும். கணவன் இறந்துவிட குழந்தைகளும் வெளிநாடு சென்றுவிட நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் தனிமை ஒருவிதமானது. அதே நேரம் வகுப்பறை முழுவதும் சகமாணவர்கள் இருந்தாலும் அவர்களுடன் நட்புப் பெற முடியாத நிலையிலுள்ள பாடசாiலை செல்லும் ஒரு பிள்ளையின் தனிமை முற்றிலும் வேறானது.

..

காது மந்தமாதலென்னும் நிசப்த நோய்....

ஆரவாரத்துடன் உடலுக்கு வேதனையுடன் வரும் நோய்களைக் கண்டறிவதில் சிக்கல்கள் ஏதும் இல்லை. ஏனெனில் வேதனையைத் தாங்க முடியாத நோயாளி உடனடியாகவே மருத்துவரை நாடுவார். வேதனைக்கான அடிப்படை நோயை மருத்துவர் துரிதாக இனம் காணுவார். குணமாக்குவது சுலபம். ஆனால் உடலுக்கு வேதனை கொடுக்காது அசுமிசமின்றி வரும் நோய்களைப் பற்றி நோயாளிகள் அக்கறை எடுப்பதில்லை. நோய் படிப்படியாக முற்றி, பிரச்சனை பூதாகரமாகும் நேரத்தில்தான் மருத்துவரை நாடுவார்கள். காலம் கடந்ததால் மருத்துவத்தின் மூலம் பூரணை பலனை பெறுவது சிக்கலாகியிருக்கும். அப்படியான நோய்களில் ஒன்றுதான் காது மந்தமாதல். வயசு போனால் காது மந்தமாகும்தானே எனக் கிணடலடித்து அசட்டை பண்ணாதீர்கள். - 'டாக்டர்' எம்.கே.முருகானந்தன் MBBS(Cey), DFM (Col), FCGP (col) , குடும்ப மருத்துவர் -ஆரவாரத்துடன் உடலுக்கு வேதனையுடன் வரும் நோய்களைக் கண்டறிவதில் சிக்கல்கள் ஏதும் இல்லை. ஏனெனில் வேதனையைத் தாங்க முடியாத நோயாளி உடனடியாகவே மருத்துவரை நாடுவார். வேதனைக்கான அடிப்படை நோயை மருத்துவர் துரிதாக இனம் காணுவார். குணமாக்குவது சுலபம். ஆனால் உடலுக்கு வேதனை கொடுக்காது அசுமிசமின்றி வரும் நோய்களைப் பற்றி நோயாளிகள் அக்கறை எடுப்பதில்லை. நோய் படிப்படியாக முற்றி, பிரச்சனை பூதாகரமாகும் நேரத்தில்தான் மருத்துவரை நாடுவார்கள். காலம் கடந்ததால் மருத்துவத்தின் மூலம் பூரணை பலனை பெறுவது சிக்கலாகியிருக்கும். அப்படியான நோய்களில் ஒன்றுதான் காது மந்தமாதல். வயசு போனால் காது மந்தமாகும்தானே எனக் கிணடலடித்து அசட்டை பண்ணாதீர்கள். அந்த வரிசையில் நிற்பவர்களில் நீங்களும் ஒருவராயிருக்கலாம். ஏனெனில் காது மந்தமாவதது மூப்படைவதால் மட்டுமல்ல எந்த வயதிலும் நேரலாம். காது கேட்காமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. வயதாவது முக்கிய காரணம் என்பதை அறிவோம். அத்துடன் பரம்பரை அம்சம், ஒலிகள், வைரஸ் தொற்று நோய்கள், ஏன் பல மருந்துகளும் கூடத்தான். ஆனால் அண்மைகாலங்களில் கவனத்தை ஈர்த்திருப்பது நீரிழிவு நோயாளிகளின் காது மந்தமாவது எனலாம்.

...

இரத்தக் கொதிப்பு பிரசரை அளவிடும்போது ...டாக்டர் செய்வதும் நீங்கள் செய்ய வேண்டியதும்

இரத்தக் கொதிப்பு -'பிரஸர் என்பது அறிகுறிகள் அற்ற நோய். இதனால் பெருந் தொகையான மக்கள் தங்களுக்குப் பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) இருப்பதை அறியாமலே இருக்கிறார்கள்' என சில வாரங்களுக்கு முன் சொன்னேன். எனவே பிரஷர் இருக்கிறதா என்பதை அறிய அதை அளந்து பார்ப்பதுதான் ஒரே வழி. நீங்கள் மருத்துவரிடம் செல்லும்போது அவர் அளவிடுவார். இப்பொழுது பலரும் பிரஸர்மானிகளை வாங்கி வைத்து தாங்களாகவே தங்கள் வீடுகளில் அளந்து பார்க்கிறார்கள்.

மருத்துவர்கள் அளவிடுவது

பிரஸரை பிரஸர்மானி கொண்டு அளவிடுவார்கள். பொதுவாக மருத்துவக் கிளினிக்குகளில் மெர்குரி (Mercury) கொண்ட பிரஸர்மானியை உபயோகிப்பார்கள். நோயாளியின் கையின் முழங்கைக்கு மேற்பட்ட பகுதியில் துணியினால் மூடப்பட்ட ரப்பர் பை (cuff) போன்ற ஒன்றை இறுக்கமாகச் சுற்றுவார்கள். பின்பு தனது கையிலுள்ள பம்பினால் காற்றை அடிப்பார்கள். இதன்போது உங்கள் கை இறுகுவது போல உணர்வீர்கள். அந்நேரத்தில் காற்றின் அமுக்கத்தால் கைநாடியின் இரத்த ஓட்டம் தடைப்படும். பின் காற்றின் அமுக்கத்தை குறைக்க இரத்த ஓட்டம் வழமையாகும்.

..

பாட்டா பாட்டிகளின் பாலுணர்வுகளும் செயற்பாடுகளும்
பாலியல், பாலுறவு, பாலியல் உணர்வுகள், பாலியல் செயற்பாடுகளில் திருப்தி மற்றும் திருப்தியின்மை போன்றவை எமது சமூகத்தில் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. நாலு பேர் மத்தியில் பேசுவதற்கு அசூசைப்படுகிறோம். தூஸணை வார்த்தைகள் போல உச்சரிக்க சங்கோசப்படுகிறோம். பாலுணர்வானது உயிரினங்களின் வாழ்வின் தொடர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் இன்றிமையாத அம்சமாக விளங்குகிறது. இருந்தபோதும் அவற்றைப் பேசா மொழிகளால் மறுதலிக்கிறோம். அதிலும் முக்கியமாக வயது முதிர்ந்தவர்களின் பாலியல் உணர்வு பற்றிய எண்ணமே எமது சமூகத்தில் அறவே கிடையாது எனலாம். பாட்டா பாட்டியுடன் நெருங்கிப் பேசினால் கிழட்டு வயதில் செல்லம் கொஞ்சிறார் என நக்கல் அடிக்கிறோம்.பாலியல், பாலுறவு, பாலியல் உணர்வுகள், பாலியல் செயற்பாடுகளில் திருப்தி மற்றும் திருப்தியின்மை போன்றவை எமது சமூகத்தில் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. நாலு பேர் மத்தியில் பேசுவதற்கு அசூசைப்படுகிறோம். தூஸணை வார்த்தைகள் போல உச்சரிக்க சங்கோசப்படுகிறோம். பாலுணர்வானது உயிரினங்களின் வாழ்வின் தொடர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் இன்றிமையாத அம்சமாக விளங்குகிறது. இருந்தபோதும் அவற்றைப் பேசா மொழிகளால் மறுதலிக்கிறோம். அதிலும் முக்கியமாக வயது முதிர்ந்தவர்களின் பாலியல் உணர்வு பற்றிய எண்ணமே எமது சமூகத்தில் அறவே கிடையாது எனலாம். பாட்டா பாட்டியுடன் நெருங்கிப் பேசினால் கிழட்டு வயதில் செல்லம் கொஞ்சிறார் என நக்கல் அடிக்கிறோம்.

..

மன அழுத்த மேலாண்மை – 1
- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -
-கோடி கோடியார் பணத்தைக் கொட்டி வியாபாரம் செய்யும் பெரும் வியாபாரியோ, அல்லது மரம் ஏறிப் பிழைக்கும் மிகச் சாதாரண தொழிலாளியோ அல்லது இவ்விருவருக்கும் இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒருவரோ, யாராக இருந்தாலும் செல்போன் இல்லாமல் இனி அன்றாட வாழ்க்கையை வாழ முடியுமா? கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெசின் போன்ற வீட்டு உபகரணங்கள் இல்லாமல் ஓர் குடும்பத்தலைவியால் இனி குடித்தனம் நடத்த முடியுமா? கவலைகள் இல்லாமல் இக்காலத்தில் இடும்பத்தலைவர் ஒருவரால் காலந்தள்ள முடியுமா? இவையாவும் இனி முடியாது. அப்படியே முடிந்தாலும் அடுத்தவர் உங்களை விடமாட்டார். இவைகளைப் போல, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தகவல் தொடர்பு வளர்ச்சியும், மக்களிடம் பரஸ்பர உறவை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் மன அழுத்தம் இல்லாமல் மனிதர்களால் இனி வாழ முடியாது. மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தேடிப் போய் கொண்டு இருக்கிறார்கள். இல்லையேல் உங்களுக்கு மன அழுத்தம் தரும் ஏராளமான விஷயங்களோடு உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்.[பதிவுகள் இணைய இதழில் செப்டம்பர் 2009 இதழ் 117இலிருந்து தொடராக வெளிவந்த இந்த உளவியற் கட்டுரைத் தொடர் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. -- ஆசிரியர்] கோடி கோடியார் பணத்தைக் கொட்டி வியாபாரம் செய்யும் பெரும் வியாபாரியோ, அல்லது மரம் ஏறிப் பிழைக்கும் மிகச் சாதாரண தொழிலாளியோ அல்லது இவ்விருவருக்கும் இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒருவரோ, யாராக இருந்தாலும் செல்போன் இல்லாமல் இனி அன்றாட வாழ்க்கையை வாழ முடியுமா? கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெசின் போன்ற வீட்டு உபகரணங்கள் இல்லாமல் ஓர் குடும்பத்தலைவியால் இனி குடித்தனம் நடத்த முடியுமா? கவலைகள் இல்லாமல் இக்காலத்தில் இடும்பத்தலைவர் ஒருவரால் காலந்தள்ள முடியுமா? இவையாவும் இனி முடியாது. அப்படியே முடிந்தாலும் அடுத்தவர் உங்களை விடமாட்டார். இவைகளைப் போல, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தகவல் தொடர்பு வளர்ச்சியும், மக்களிடம் பரஸ்பர உறவை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் மன அழுத்தம் இல்லாமல் மனிதர்களால் இனி வாழ முடியாது. மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தேடிப் போய் கொண்டு இருக்கிறார்கள். இல்லையேல் உங்களுக்கு மன அழுத்தம் தரும் ஏராளமான விஷயங்களோடு உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த உலகத்தில் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களோடு நீங்கள் வாழ வேண்டும் என்றால், அறிவியல் வளர்ச்சியினாலும் தொழில் நுட்ப வளர்ச்சியினாலும் ஏற்பட்டுள்ள வாழ்க்கை வசதிகளை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு ஓர் விலை கொடுத்தே ஆக வேண்டும். அந்த விலையே மன அழுத்தம்.

..

நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்
- Dr.M.K.முருகானந்தன் M.B.B.S(Cey), D.F.M(SL), M.C.G.P(SL) குடும்ப வைத்திய நிபுணர் -அந்தச் செய்தி என்னை கவலைப்பட வைத்தது. அவளின் நீரிழிவு இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறதோ, பிரஸர் சிறுநீரகச் செயற்பாடு எல்லாம் எப்படி இருக்குமோ எனச் சந்தேகித்தேன். இத்தனைக்கும் அவள் ஒழுங்காக வேளை தவறாது மருந்துகளைச் சாப்பிடுகிறாள். அதுவும் மருத்துவனான அவளது கணவன் நீரிழிவுக்கு என எழுதிக் கொடுத்த அதே மருந்துகளைத்தான். ஆனால் அவர் இறந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிறது. அதன் பிறகு அவள் மருத்துவர்களிடம் போகவும் இல்லை. பரிசோதனைகளைச் செய்யவும் இல்லை. மருந்துகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இது எவ்வளவு தவறானது என்பதை இற்றைவரை அவள் புரிந்திருக்கவில்லை. நீரிழிவு என்பது கால ஓட்டத்துடன் தீவிரமாகும் ஒரு நோய். காலம் செல்லச் செல்ல நோய் அதிகரிக்கும். அத்துடன் நோய் கட்டுப்பாட்டில் இல்லையேல் பல்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

.

கொலஸ்டரோல் பிரச்சனையும்! அதைக் கட்டுப்படுத்துவதும்!
உங்களுக்கு இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகம் என இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு மாத்திரமல்ல இன்னும் பலர் இந்தக் கொலஸ்டரோல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பரிதாபம் என்னவென்றால் மிகப் பெரும்பாலானவர்கள் தமக்கு இப்பிரச்சனை இருப்பதை அறியாமல் இருப்பதுதான். இதற்குக் காரணம் இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் அதிகரித்த நிலையானது எந்தவித அறிகுறிகளையோ பாதிப்புகளையோ உடனடியாக வெளிக் காட்டுவதில்லை. வைத்திய ஆலோசனையும் இரத்தப் பரிசோதனையும் மாத்திரம்தான் இப்பிரச்சனை உங்களுக்கு இருப்பதை ஆரம்பத்திலேயே உணர்த்தும். ஆனால் நடுத்தர வயதிலும் முதுமையிலும் வரக்கூடிய சில ஆபத்தான நோய்களுக்கு இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் ஒரு அடிப்படைக் காரணமாகும்.

..

இளைஞர்களே! நாளைய உலகம் உங்கள் கையில்.. இன்றைய உங்களை எதிர்காலத்திற்காகக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்
'நாளைய உலகம் உங்கள் கையில், நாளைய தலைவர்கள் நீங்கள்தான், எதிர்கால நட்சத்திரங்கள்' இப்படியாக தேசிய அளவில் நீங்கள் பேசப்படுகிறீர்கள். எதிர்காலம் உங்களால் வளம் பெறும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் உலக மாந்தர். குடும்ப அளவில் நோக்கினால் 'நாளை குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உன்கையில், சகோதரங்களை கரை சேர்க்கும் பொறுப்பு, குடும்பக் கடன்களை தீர்க்க வேண்டிய தார்மீகக் கடமை' எனப் பல உங்களைக் எதிர்பார்த்திருக்கின்றன. இவற்றில் பல உங்களுக்கு எதிர்காலத்தில் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கப் போகின்றன. சில புகழின் உச்சங்களுக்கும் இட்டுச் செல்லப் போகின்றன. வேறு பல கடமைகள் உங்களுக்கு உற்சாகம் அளிக்காவிட்டாலும் மகிழ்வைத் தராது போனாலும் கட்டாயம் செய்ய வேண்டியவை.

...

இல்லம் கழிவறை போலாவதைத் தடுக்கும் சிறுநீர் அகற்றும் குழாய்
ஒரு வீட்டினுள் நுழைகிறீர்கள். கழிவறை போல நாற்றம் விரட்ட முனைகிறது. உங்களையறியாது கை மூக்கைப் பொத்துகிறது. 'ஐயாவிற்கு (அல்லது அம்மாவிற்கு) பாத்ரூம் போவதற்கிடையில் சிந்திவிடுகிறது. கொன்ரோல் இல்லை' என்கிறார் வீட்டுக்காரர் மிகுந்த சங்கோசத்துடன். அவமானம் மட்டுமல்ல சுகாதரக் கேடும் கூட. இதற்கான தீர்வு சிறுநீர் அகற்றும் குழாய்தான் என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. மாறாக தெளிவாகப் புரிந்து, சரியாகப் பயன்படுத்தி மற்றவர் மதிக்கும் வண்ணம் உயர் தொழிலைத் தொடரும் வெற்றியாளர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆம்! சிறுநீர் அகற்றும் குழாய் இன்று பல முதியவர்களுக்கு இன்றியமையாத அங்கமாக இருக்கிறது. அவர்களின் உற்ற துணையாக வாழ்வின் பங்காளியாகி விட்டது.

.

எழுதியவர் : (9-Mar-16, 3:13 am)
பார்வை : 461

மேலே