தேர்தல்-உரையாடல்

நடக்கவிருக்கும் பொது தேர்தல்
----------------------------------------------

பற்றிய ஒரு உரையாடல்
--------------------------------------

சேகர் : என்ன சுந்தர் தேர்தல் வராப்போல இருக்கு

அதை பத்தி நீ என்ன நினைக்கிற ?

சுந்தர் : இதுல நெனெக்கர்துக்கு என்ன இருக்கு

பொதுநலத் தொண்டு என்பது

இந்த அறுபத்தி நான்கு ஆண்டுகளில்

சுருங்கிபோய் காண துர்லபமாய்

எங்கோ மறைந்து நிக்குது

சேகர் : ஆமாம் அதுக்கும் தேர்தலுக்கும்

என்னய்யா சம்பந்தம் ?

சுந்தர்: சொல்ல வரதுக்குள்ள அவசரப்பட்டா

எப்படி?

இந்த தேர்தல் சுய நல கட்சிகளுக்காக -

கட்சி பிரமுகர்களுக்காக பொதுப்

பணத்தில் (அதாவது வசூல் செயப்பட்ட

கட்சிப் பணம் ,மற்றும் அரசாங்க பொதுப்

பணம் கொண்டு நடத்தப்படும் தேர்தல்

மக்கள் ஈடுபடுதப்படுகிரார்கள் என்று

கூறுவேன்; ஈடுபாடு உண்டா யாம்

அறியோம்

சேகர் : அது சரி சுந்தர் இது நாள் மக்களுக்கு

என்ன லாபம் ?

சுந்தர் : மக்களே அறிவர்

கட்சி பிரமுகர் பலர்

அந்தஸ்தில் உயர்ந்து கொண்டே போவர்

ஒரு சிலர் காணாமலும் போய் விடுவர்

சேகர்: மக்கள் ?

சுந்தர் : ஒன்றும் புரியாமல் அடுத்த தேர்தல்

நோக்கி நடப்பார் - கழுதை தேய்ந்து

கட்டெறும்பு ஆனது போல்!

சேகர் : நன்றி வணக்கம் சுந்தர்

நாளைப் பார்ப்போமா?

எழுதியவர் : வசவன்-வாசுதேவன்-தமிழ்பித (17-Mar-14, 3:55 pm)
பார்வை : 173

சிறந்த நகைச்சுவைகள்

மேலே