அகிலஇந்திய காதலிகள் சங்கம்
(புதிதாய் ஒரு கோவில் கட்டி,அதன் திறப்பு விழாவில் கோவிலைக் கட்டிய குழுவின் தலைவி மேடையில்......)
தலைவி : அன்பார்ந்த தோழர்களே அனைவருக்கும் வணக்கம்,இந்தக் கோவில் ஒரு மிகப் பெரிய சரித்திரநோக்கோடு படைக்கப்பட்டுள்ளது. ஆம்,இது காதலில் தோல்வியுற்ற ஆண்களுக்காக, காதலில் தோல்வியுற்ற பெண்கள் நாங்களெல்லாம் ஒன்றாக சேர்ந்து,ஒரு குழுவாகி இது கட்டப்பட்டுள்ளது. காதலில் தோற்ற ஆண்கள் இதை மடமாக எண்ணி மீதமிருக்கும் வாழ்க்கையை புண்ணியத்தில் கழிப்பதற்கும், கோவிலுக்கு வெளியில் அமர்ந்து தருமம் பெற்று ஜீவனத்தை நடத்தவும், செருப்புகளை பாதுகாத்து வருமானத்தைப் பெறவும்,கொஞ்சம் வசதி பெற்றோர் பூக்கடை, தேங்காய்கடை என்று வைத்து பிழைப்பு நடத்தி கொள்ளவும் இது பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ளது.
காலங்காலமாக தாஜ்மஹாலையும்,இன்ன பிற இடங்களையும் காதலனின் சாட்சிகளாக சொல்லும் சமுதாயம்,வருங்காலத்தில் இதை காதலிகளின் சாட்சிகளாக பார்க்கும் என நம்புகிறேன்.இனி யாரும் காதலிக்கும் அல்லது காதலித்து தோல்வியுற்று இருக்கும் பெண்களை,ஒன்றுமே செய்யவில்லை என குறை கூற மாட்டார்கள் என்று உறுதியாக நம்பிக்கை வைத்து எனது இந்த சிறிய உரையை நிறைவு செய்கிறேன்.நன்றி,வணக்கம்.
பின்குறிப்பு : காதலில் தோற்ற ஆண்கள் தாடியுடன் வர வேண்டும். தாடிக்குக் காரணம் காதல்தான் என்பதை உறுதிசெய்யும் வகையில் பெற்றோர்களின் கையெழுத்திட்ட விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.அனைவரும் வருக...ஆதரவு பெறுக....
இவண்
அகில இந்திய காதலிகள் சங்கம்
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
