ஓர் எழுத்தாளனின் கதை-9

“ காவி...! நீ சொன்ன கவிதை எப்போ எழுதி தரணும் “ தினகரன்.

“ இப்போ. இப்போவே...” காவியா தினகரனை அவசரப்படுத்துகிறாள்.

“ ஹே என்னடி நீ...! அவ்வளவு பெரிய விஷயத்தை இப்போவே எழுதி தர சொல்ற? . அடுத்த வாரம் தானே போராட்டம்.. இரண்டு நாள் டைம் கொடு..” காவியாவிடம் கெஞ்சுகிறான் தினகரன்.

“ நோ வே. நீ இப்போ எழுதினா தான் என்ன என்ன மாற்றம் பண்ணலாம்ன்னு யோசிக்க டைம் இருக்கும்.. சீ டா.. இது கவர்மெண்ட் எதிர்க்கிற போராட்டம். சோ....கவிதை செம ஹீட்டா ஹிட்டா ஆகணும். இப்போவே எழுதினாதான் அடுத்த வாரம் பைனல் ஆகும் “ காவியா வேண்டுமென்றே அவசரப்படுத்துகிறாள்.

காரணம், தினகரனின் மூளைக்கு ஓர் அழுத்தம் கொடுத்து, அதனால் அவன் என்ன சிரமப்படுகிறான், அதை எப்படி சமாளிக்க வைக்கலாம் என்று முன்கூட்டியே மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு, திட்டம் போட்டு வைத்திருக்கிறாள். ஆனால் தினகரனால் அதிக அழுத்தமான சூழ்நிலையில், அதிக வற்புறுத்தி சிந்தித்தால், அவனின் அதீத உணர்ச்சியால் மூளை தண்டுவடம் பாதிக்கும். அது அவனின் உயிரையே எடுக்கும்.

காவியா கிட்டதட்ட உயிரை பணய வைக்கும் முயற்சியாக இருந்தாலும் முடிவு நல்லவிதமாக அமையும் என்று அதிகப்படியான, அதீத அதிகப்படியான தன்னம்பிக்கையில் இருந்தாள்.

“ தினா... ம்ம்ம் பர்ஸ்ட் லைன் எழுது... “ இயல்பாக இல்லாமல் ஒரு வித மிரட்டல் தொனியில் தினகரனுக்கு கட்டளையிடுகிறாள்.

“ இரு....இரு காவி...” யோசிக்கிறான்.

”கவிதையின் தலைப்பு என்ன ? ” காவியா

“எழுதிட்டு அப்புறம் யோசிக்கலாம் காவி..சரியா ? “

“ இல்ல தலைப்பு போட்டு அப்புறம் கவிதை எழுது “

“ என்ன...........டீ ரொம்ப மிரட்டுற..சரிதான் போடின்னு போயிடுவேன்.. ஓவரா.............. “ தினகரனுக்கு திக்க ஆரம்பிக்கிறது. உணர்ச்சி வசப்பட ஆரம்பிக்கிறான். காவியா ஏன் இப்படி நடந்துகொள்கிறாள் என்று புரியாமல் தன் பக்குவநிலைக்கு அப்பாற்பட்டு கோவமடைவதால் , அவனின் மூளையில் ரசாயன மாற்றம் ஆரம்பிக்க, சிந்திக்கும் திறன் இழக்கிறது. கோவத்தில் அவன் முகம் சிவப்பதை கண்ட காவியா


“ஹே தினா... சாரிடா செல்லக்குட்டி..! ஏன் இப்போ டென்ஷன் ஆகுற? “ என்று கேட்டுக்கொண்டே தன் இரண்டு கைகளால் தினாவின் கன்னத்தில் கைவைத்து குழந்தையை கொஞ்சுவது போல கொஞ்ச...

காதலி கைப்பட்டா
எரிமலைக்கூட
பனிமலையாகுமே....!

தினகரன் அதற்கு விதிவிலக்கா என்ன ?

“லூசு.. ஏன் இப்படி பிகேவ் பண்ணுற காவி.. மிரட்டுற , இப்போ கொஞ்சுற.. சம்திங் ராங் வித் யூ டா “ தினகரன்.

காவியா மனதிற்குள்.. “எனக்கா... பாவி ... உன் எமோஷனல் ப்ராப்ளம் கியூர் ஆக நான் என்ன ரிஸ்க் எடுக்குறேன்.. நீ என்னையே பைத்தியமா பாக்குற,,, “ என்று நினைத்துவிட்டு... ”சரிடா....! எழுது....”


“ ம்ம் நான் கவிதை எழுதிட்டு தான் தலைப்பு போடுவேன்.”

“ சரி எழுதி தொலை..”

கவிதையின் முதல் வரி... சற்று ஆக்ரோஷம் குறைவாக எழுதி காவியாவிடம் கேட்கிறான்..

“ முதல்ல ஒரு பேரா எழுது.. அப்புறம் பாப்போம் “ காவியா அறிவுறுத்த

எழுதுகிறான்.... எழுதிவிட்டான், எழுதியதை எடுத்து காட்டினான். காவியா அதை படித்து காட்ட வேண்டும் என்றாள்.

படித்த தினகரனை பார்த்து.. “ தினா... காரம் கம்மியா இருக்கு.. இன்னும் கொஞ்சம் தூக்கலா.... தைரியமா எழுதுடா “

“எப்படி காவி என்னதான் இருந்தாலும் நம்ம பிரைம் மினிஸ்டர் ..அவரை தப்பா சொல்லக்கூடாது காவி “

“இல்ல எழுது... கடைசி நேரத்துல பாக்கலாம் “ காவியா எப்படியாவது மறுமுறை தினகரனை சிந்திக்க தூண்டுகிறாள்.

சிந்திக்க ஆரம்பித்தான். உடனே எழுதினான். எழுதும்போதே அவனின் முகத்தில் ஒரு திருப்தி அலை ஓடியது. இதை கண்ட காவியா ஒரு யுக்தி கையாண்டாள்.

“தினா...! பர்ஸ்ட் பேரா அப்புறம் எழுதிக்கலாம்... மெயின் பாயிண்ட் மீனவர் பிரச்சினை பத்தி எழுதிட்டு அப்புறம் பர்ஸ்ட் எழுது....”

“ ஸ்டூபீட்... கவிதை எப்படி எழுதனும்ன்னு எனக்கு தெரியும். முதல் வரி ஆரம்பிச்சா கோர்வையா நூல் பிடிச்சு கடைசில முடிப்பேன்.. நீ மூடு...! “ மூடு என்று இழிவாக பேசிய தினகரன் அதை தவறு என்று புரியாமல் பேசிவிட்டான் என்று தெரிந்தாலும் அதையே ஒரு பெரிய பிரச்சினை பண்ண ஆரம்பித்தாள் காவியா.

“ ஹே மைண்ட் யுவர் வோர்ட்ஸ் தினா. என்னடா லிமிட் கிராஸ் பண்றா... நான் ஒரு பொண்ணு என்னை பார்த்து இப்படி அசிங்கமா பேசுற... ராஸ்கல்..! “

“ லூசு வாட் ஹேப்பன்.. நான் என்ன சொன்னேன்னு இவ்வளவு கோவப்படுற...? “

“ நீ என்ன சொன்னன்னு திரும்ப யோசிச்சு பாரு...தினா “என்று பொய்யாக கண்ணீர் வடித்தாள்.

இதை கண்ட தினகரன் “ காவி.. ப்ளீஸ் அழாதே டீ...! நான் எழுதவா இல்ல உன்கிட்ட இப்படி ஆர்கியூ பண்ணவா.. ஏன் இப்படி என்னை டார்ச்சர் பண்ற... இப்போ என்ன .. சாரி சாரி சாரி போதுமா.. வெயிட். நீ சொன்ன பாயிண்ட் எழுதி காட்டுறேன். நான் யாரன்னு இப்போ இப்போ இ இ இ இப்போ ............... “ திக்கும் ஓசை நீளுகிறது. அது அவனின் தாழ்வுமனப்பான்மையால் அல்ல.. அதீத உணர்ச்சி மயம். ஆர்வம் மேலோங்கும் போது திக்க வாய் வருகிறது.

“ தினா... ! ஒகே ஒகே... திக்கி பேசினா ஸ்டாப் பண்ணிட்டு பேசு.. ஓகே ரிலாக்ஸ்.. ஓகே நான் தப்பா நினைக்கல...! நீ எழுது.. “


“இல்ல.. நீ சொன்ன பாயிண்ட் எழுதிட்டு அப்புறம் உன்கிட்ட பேசுறேன்..” பிடிவாதம் பண்ண ஆரம்பித்து எழுத ஆரம்பித்தான். இதை எதிர்பார்த்த காவியா அவனின் சிந்தனையில் வரும் ஆக்ரோஷ வரிகளை வாசிக்க ஆவலுடன் காத்திருக்க..


தினா மடமடவென் எதையோ எழுதுகிறான். எழுதும்போது அவனின் முகம் பல பாவனைகளை காட்டுகிறது . என்ன எழுதுகிறான் என்பதை அவன் முகத்தை பார்த்து அறிந்து கொள்ள முடியும். விகாரமாக முகத்தை வைத்து.. கண் இமைக்காமல், எழுதுகோலை தாளில் இருந்து எடுக்காமல் எழுதுகிறான்.

தீடிரென.. சிந்தனையில் ஏதோ ஒரு வார்த்தைகள் சிக்காமல் போக, தன் எழுதுகோலை எடுத்து தன் வலது நெற்றியில் தன்னையும் அறியாமல் குத்திக்கொள்ள... அந்த எழுதுகோல் வலது கண்ணுக்கு மேல் பலமாக தாக்குகிறது.
இரத்தம் பீறிட்டு சீறி ஆக்ரோஷமாக வெளியேறினாலும்
தினகரன் அதை பொருட்படுத்தாமல் எழுத ஆரம்பிக்க...
எழுதும் தாளில் சிவப்பு மையாக அவன் ரத்தம் படிவதை , கவனக்குறைவாக இருந்த காவியா எதேச்சையாக பார்த்து விட, பார்த்து துடித்து விட.. அலறுகிறாள்...!

“ டேய் தினா.....! பிளட் வருதுடா... பிளட் பிளட் டா தினா.....................! “ என்று அலறி கூப்பாடு போட்டு அவனை உலுக்குகிறாள்.

நிமிர்ந்த பார்த்த தினா....” காவி டிஸ்டர்ப் பண்ணாதே......... டிஸ்டர்ப் பண்ணாதே... பண்ணாதே .. பண்ணாதே...! “

காவியாவின் அலறல் ஒலியை விட அவனின் அதட்டல் ஒலி அதிர வைத்தது.

”ஐய்யோ.. டேய் தினா ஏண்டா இப்படி பிகேவ் பண்ணுற....? பிளட் வருதுடா... ரைட் ஐ மேல பிளட் வருதுடா...!
தினா நீ ஒன்னும் எழுத வேண்டாம். எனக்கு பயமா இருக்கு “ பயத்தால் கெஞ்ச ஆரம்பித்தாள்.

என்ன ஆயிற்று தினகரனுக்கு....? காவியாவிற்கு சற்று நேரத்திற்கு பிறகு புரிந்தது.


தினகரன் கவிதை எழுதுவானா என்பதல்ல இப்போது கேள்வி.. தினகரன் ஏன் இப்படி ஆனான்.. இது அவனை என்ன செய்யும்....?


(தொடரும்)

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (18-Mar-14, 6:54 am)
பார்வை : 239

மேலே