மனசாட்சி

மனசாட்சி எனை ஆட்சி செய்ய வேண்டும்!
மாந்தருள்ளம் என்றும் எழுச்சி பெற வேண்டும்!

மடமைக் குணம் எமை விட்டொழிய வேண்டும்!
முயன்றிடுவார் கென்றும் உதவிடலும் வேண்டும்!

பழைமை நல்ல செயல்களை மதித்திடல் வேண்டும்
புதுமை கண்டும் என்றும் ஏற்றிடல் வேண்டும்!

ஏற்றத்தாழ்வதனை வெறுத்திடல் வேண்டும்!
ஏந்திடுவார்க்கு கை கொடுத்திடலும் வேண்டும்!

நற்பண்பே நம் குணமாக வேண்டும்!
நாளும் நற்பணிக் கர்ப்பணித்தலும் வேண்டும்!

தீதாம் தீக்குணத்தை விட்டகழ வேண்டும்!
தீஞ்சுவையாம் நல்லுள்ளம் பெறவும் வேண்டும்!

ஏடுகள் பல கண்டு கற்றிடல் வேண்டும்!
ஏடுகள் கற்றும் கொடுத்திடலும் வேண்டும்!

சிறப்பாய் சிந்திக்க முயன்றிடல் வேண்டும்!
சிறியோர் சிந்தனைக்கும் வழி காட்டிட வேண்டும்!

பொறாமைக் குணம் நீங்கி வாழ்ந்திடல் வேண்டும்!
புகழ்வோரை மனதார புகழ்தலும் வேண்டும்!

மங்கையவர் கருத்துக்கும் தலைசாய்க்க வேண்டும்!
மாதர்குல செயல்களையும் புகழ்தல் வேண்டும்!

தலைவர்தம் கட்டளைகள் ஆற்றல் வேண்டும்!
தலைமைதனை ஏற்றுப் பணிந்திடலும் வேண்டும்!

ஊரவர்கள் ஒற்றுமைக்கு உரமிடல் வேண்டும்!
ஊட்டமிகு உழைப்புதனை மதித்திடலும் வேண்டும்!

வாழ வழி தெரியார்க்கு வழி காட்ட வேண்டும்!
வளம் தன்னை பெற்றுக் கொடுத்திடலும் வேண்டும்

நம்பி நமை நாடுவார்க்கு இடந்தர வேண்டும்!
நன்றி செய்தாரை நினைந்திடலும் வேண்டும்!

எழுதியவர் : ஜவ்ஹர் (20-Mar-14, 11:02 pm)
பார்வை : 77

மேலே