பூ நாகம்----அஹமது அலி--
அமுதூறிய உன்னிதழ்கள்
அமிலம் ஊற்றி
என் முகத்தில் உமிழ்ந்த போது
அரித்துப் போனது
என் முகமல்லவே...
...
உனக்காக அழகு வளர்த்த
என் ஆசை மனம்!
/0/
உன்னைத் தாங்கியே
சுகம் கண்ட மனது-இன்று
உனக்காக ஏங்கியே
சுமையானது!
/0/
உன்னை பூவென்று
வருணித்த போதெல்லாம்
பூவுக்கு அழகு மென்மை நறுமணம்
இருப்பது மட்டுமே தெரியும்
இப்போது தான்
பூ நாகமும் இருப்பது புரிகிறது!
/0/
உயிர் கொலை
கேள்விப் பட்டதுண்டு
மனக் கொலையும்
மரணம் போன்றதென
அறியத் தந்து
ஆராட்டியத்தில் தாலாட்டுகிறாய்..
/0/
நொண்டியான பின்பு
அடிக்கடி தடுமாறுவது
கால்கள் மட்டுமல்லவே...
மனதும் தான்!
...
விழுந்து எழுகின்ற போது தானே
இது புரிகிறது..
/0/
குழந்தயின் மனமுனக்கு
என்றது எத்தனை பிழையாகி விட்டது
புதுப் பொருள் பற்றி
பழைய பொருள் தூக்கி எறிய
என் சொல்லின் மெய்
பொய்த்துப் போனது!
/0/
என் அன்பின் மெய்
செத்துப் பிழைக்கும்
கலையினை கற்றுத் தருகிறது!

