தாலாட்டுவேன் தங்கையே - அன்பின் அழகு மலர் நீயே

நிழலே இல்லா என் பயணம்
நீண்டு சென்றது பல வருடம் ...!
பழகி பார்த்தது சுவடிடம்
பற்றி எறிந்த என் பாதம் ...!!
அன்பிற்கு மட்டும் ஏங்கி
கிளையின் ஓரம் ஒதுங்கி ...!!
பாசமே நிழலாய் வாங்கி
இலையை கூட ரசித்தேனே ..!!
"அண்ணா" எனும் அழைப்பில்தான்
நானும் வாழ்ந்தேன் முழுதாக ...!!
உணர்வை எல்லாம் உருக்கி
உனக்காய் தந்தேன் தரமாக ..!!
நண்பன் என பலர் இருக்க
எல்லாம் பகிர்ந்தேன் உன்னிடமே ..!!
தங்கை உனையே நானென்றும்
தாயை போல உணர்ந்தேனே ..!!
எதையும் பகிர மறுத்தாயே
அதையே சொல்லி வதைத்தாயே ..!!
கொஞ்சம் கேட்டேன் அன்பாக
கொடுக்க கூட மறுத்தாயே ...!!
பரிசை ஏனோ வெறுத்து - என்
உணர்வையும் இங்கே நீ மிதித்தாய் ...!!
அன்பை கூட அவமதித்து - என்
இதயம் கொஞ்சம் நீ கிழித்தாய் ...!!
உன்னுடன் பிறவாதது என் தவறா..?
இதற்காய் பிரிவது இவ்வுறவா...?
தகுதி இல்லா தமையன் நானோ ..?
பாசம் வைத்த மடையன் நானோ ..?
உடையும் கூட உன் நினைவில் ..!
விரலும் வாழுது உன் பரிசில் ..!!
கைபேசி கேட்குது உன் குரலை ..!
இமையும் இதழும் உன் நினைவில் ..!!
தங்கை என்றும் நீ கண்ணே ...!
உரிமை இல்லை ஏன் கண்ணே ..?
நீ சிரிக்க வேண்டும் அழகாக - என்
கையில் சின்ன பிள்ளை நீயாக !!
தங்கையே உன்னை தாலாட்டி
ஆசை எல்லாம் நிறைவேற்றி ..!
கோவம் எல்லாம் நான் ரசித்து
கொஞ்ச வேண்டும் குழந்தையாய் ...!!
என் நினைவும் கனவும் நீ அறிவாய் ..!
எல்லாம் தருவேன் உனக்காக ..!!
உணர்வை கொஞ்சம் புரிந்து கொள் ..!
அண்ணன் என ஏற்று கொள் ..!
துக்கம் எல்லாம் தூளாகி
அன்பே அழகு மலராகும் ..!!
பாதம் தொட்டு வாழ்த்துகிறேன் ..!
பாசம் கொஞ்சம் தந்து விடு ...!!
===============================================
மார்ச் 28 - ல் பிறந்தநாள் காணும்
உடன் பிறவா செல்ல தங்கை சங்கீதாவிற்கு
மனம் மகிழ்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
===============================================
-----இராஜ்குமார்