இதயம் பலகீனமானவர்கள் இதை படிக்க வேண்டாம்

படித்தது-

இதயம் பலகீனமானவர்கள் இதை படிக்க வேண்டாம்,நான் மறக்க நினைத்தும் மறக்க முடியாத கதை. எனது தூரத்து உறவுக்கரரான பிரகாஷ் என்பவரின் குடும்பத்தில் நடந்த ஒரு சொக சம்பவம். பிரகாஷ் சென்னை அடுத்து ஆவடியில் வசித்து வந்தார், அம்பாத்தூரில் உள்ள ஒரு சைக்கிள் கம்பணியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்,அவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த கையொடு தன் மனைவி நளினியின் உறவினர்கள் வீட்டு விருந்தையும் முடித்துகொண்டு,நான்கே நாட்களில் பணிக்கு திரும்பி விட்டார்,அதை பார்த்த அனைவரும் குழப்பத்தில் இருந்தனர் கம்பணியில் இருந்தவர்கள் கூட "ஏன்?இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட "என்று கேட்டு இருக்கிறார்கள்.அதற்கு அவர் இந்த லீவ்வே பொதும் என்று கூறிவிட்டார்.அந்த அளவிற்கு தொழில் மீது அவருக்கு பக்தி.இதை அவர் மனைவியும் புரிந்துக்கொண்டு அவரின் விருப்படியே நடந்துக்கொண்டார்,அவர் குடுத்து வைத்தவர் என்று அனைவரும் புகழ்ந்து தள்ளினார்கள்.தினமும் வேலைக்கு செல்லும் பொது தன் மனைவிக்கு ஆசையாக முத்தம் கொடுத்து விட்டு தான் போவார்.மாலை சரியாக ஆறு மணிக்கு எல்லாம் கையில் 'பூ'வுடன் வந்து இருப்பார்.இப்படி சந்தோஷமாக போயிக்கொண்டிருந்த வேளையில் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை அந்த சொகம் நடந்து விட்டது.

ஒரு நாள் வழக்கம்பொல் தன் மனைவிக்கு முத்தம் குடுத்து விட்டு,வேலைக்கு புதியதாக வாங்கிய பைக்கிள் கிளம்பினார்.அவர் போன அடுத்த இருபது நிமிடத்தில் அவர் வீட்டு ஃபோன் அடித்தது அவர் மனைவி நளினி தான் ஃபோனை எடுக்கிறாள்.எதிர்முனையில் கூறிய விஷயத்தை கேட்டு "அய்யோ" என்று கத்தியபடி வேளியே ஒடினாள், மற்றவர்களும் ஒன்னும் புரியாமல் அவளுடன் ஒடினார்கள்.அவர்கள் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் தான் மெயின் ரோடு அங்கே ஒடிப்பொயி அவர்கள் கண்ட காட்சி ....

பிரகாஷ் பைக்கிள் ரோட்டை க்ராஸ் பண்ணுவதருக்கு வண்டியின் வேகத்தை அதிக படுத்திய அதே நேரம் ஒரு நாய் குறுக்கே வந்ததால் அதன் மீது மொதி நிலைத்தடுமாறி கீழே விழ அப்பொழுது அங்கு வேகமாக வந்த லாரி ஒன்று பிரகாஷ் மீது மோதி அவர் மேல் ஏறிவிட்டது.இதைத்தான் நளினியும் மற்றவர்களும் கண்ட காட்சி.. அதற்குள் போலீஷ் வந்து இவர்களுக்கு தகவல் கொடுத்து இருக்கிறது.பிரகாஷின் உடலை 'பொஸ்ட் மார்டம்'பண்ணுவதருக்கு போலீஸ் அம்புலன்சு முலமாக அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றுவிட்டனர்.எல்லாம் முடிந்து விட்ட நிலையில்...!

ஒரு வாரம் கழித்து போலீஸ் நளினியை தேடி வந்து பிரகாஷ் விபத்தின்பொது அணிந்து இருந்த ரத்தகறை படிந்த அந்த துணியை கொடுத்தனர்.அதுவரை பிரமைபிடித்தவள்போல் இருந்த நளினி அந்த துணியை பார்த்ததும் 'ஓ'வென்று கதறினாள்.அன்றிலிருந்து அந்த துணியை பார்த்துகொண்டு பிரமைபிடித்தவள்ப்போல் வேறித்து பார்த்துகொண்டே இருந்தாள்.இரண்டு மாதங்கள் ஒடிவிட்டன எல்லாம் சகஜ நிலைக்கு திரும்பின.ஆனால் நளினி மட்டும் மாறாமல் அப்படியே இருந்தாள்!வீட்டிலிருந்தவர்களும் அக்கம்பக்கத்தினரும் அந்த துணியை தூக்கி போடு அது இருக்கும்வரை உனக்கு அந்த‌ ஞாபகம் வந்துக்கிட்டே இருக்கும் என்று கூறியும்,நளினி அதை தூக்கி போடவில்லை.

ஒரு நாள் துணித்துவைப்பதற்காக எல்லா துணியையும் எடுத்து கொண்டு நளினி அங்கிருந்த குளக்கரைக்கு தனியாக வந்தாள் யாரும் இல்லை அங்கே.மதியம் 12.00 மணி இருக்கும்.எல்லத்துணிகளையும் துவைப்பதற்கு எடுத்தபொழுது அந்த ரத்தகரை படிந்த துணியும் இருந்தது அதை எடுத்து தண்ணியில் அமுக்கினாள்,திடிரேன்று பயங்கர இடி சத்தம்,திடுக்கிட்டுப்போனாள் நளினி மேலை பார்த்தாள் வானம் இருட்டிக்கொண்டு வந்தது.சுற்றும்முற்றும் பார்த்தாள் ஆள் நடமாட்டமே இல்லை,சரி மழை வருவதற்குள் துவைத்து கிளம்பிட நினைத்து அந்த துணியை மீண்டும் குளத்தில் அமுக்கினாள் மறுபடியும் பயங்கர இடி சத்தம்! இந்த முறை நளினி பயந்து விட்டாள்,ஏதோ நடக்கப்போகிறது என்பதை அவள் உள் மனம் சொல்லிற்று. ‌

இருந்தும் அந்த துணியை துவைக்கமால் போவதில்லை என்று துவைக்க அரம்பித்தாள்.என்ன?ஆச்சாரியம் அந்த துணியிலிருந்த ரத்தகரை சற்றும் போகவில்லை !மீண்டும் மீண்டும் அந்த துணியை அடித்து துவைக்க முயன்றாள் துளிகறையும் போகவில்லை.நளினி புரியாமல் முழித்தாள் அந்த நேரம் மேகம் மேலும் இருட்டிக்கொண்டு இருந்தது,



அப்போழுது மேலிருந்து ஒரு 'ஒளிக்கீற்று' குளத்தின் நடுவே இறங்கி புகை போன்று ஒரு உருவம் தெரிந்தது,அதை பார்த்த நளினியாள் கத்தவும் முடியவில்லை ஒடவும் முடியவில்லை அதே நேரம் அந்த உருவம் அவளை நோக்கி வேகமாக வந்தது, அது அருகில் வர வர பார்த்த உருவம் போல் தொன்ற அமைதியாக நின்றுவிட்டாள்,


அந்த உருவம் அருகில் வந்ததும் அது யார்? என்று பார்ப்பதர்க்குள் அந்த உருவம் ஒரு பேப்பரில் சுருட்டி எதோ ஒன்றை நளினியிடம் குடுத்து மறைந்து விட்டது.



உருவம் மறைந்து போனதால் கையிலிருந்த பொருளை உற்று நோக்கினாள் நளினி அப்பொழுது மேலிருந்து ஒரு 'அசீரிரி குரல்' கேட்டது



"எந்த கரையாக இருந்தாலும் அதனை அகற்றி பளீச்சிடும் வேண்மைக்கு உபயோகிப்பீர் RIN RIN RIN(echo voice).






நளினி கையை பார்த்தாள் அவ‌ள் கையில் இருந்த‌து புத்த‌ம் புதிய‌ "RIN SOAP".

எழுதியவர் : (24-Mar-14, 2:11 pm)
சேர்த்தது : இஸ்மாயில் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 7234

மேலே