உலக அதிசயங்களும் உடன் வந்த கதைகளும்
அன்புள்ள
எழுத்து நண்பர்களுக்கு என் வணக்கம். ஒரு கதை பற்றி உங்களுடன் விவாதிக்க விழைந்துள்ளேன். எல்லா உலக அதிசயங்களுக்கு பின் புலமாக நிச்சயம் ஒரு கதை இருக்கும். அதுவும் காதல் கதை எனில் கூடுதல் சுவாரசியம் கொடுக்கும். தாஜ் மஹால் மட்டுமல்ல, சீன நெடுஞ்சுவர், இத்தாலியில் இருக்கும் கேளிக்கை அரங்கு என அனைத்திலும் காதல் ஒரு மையக் கருத்தாக பின்னப்பட்டிருக்கும். தொடர்ந்து பதிமூன்று வாரங்கள் "உலக அதிசயங்களும் உடன் வந்த கதைகளும்" என்ற தலைப்பில் உங்களுடன் ஒரு காதல் கதைகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகிறேன். எந்த அளவிற்கு இதில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதை வாசகர்களாகிய நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். எழுத்தில் நான் அந்தக் கதைகளை பதிவு செய்யலாமா என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டு. பரிசோதனை ஓட்டமாக கொஞ்சம்.
பெட்ரா-உலக அதிசங்ளில் இருந்து ஒரு பகுதி>
மழையின் கடைசித் தூரல்களின் தாள ஒலி தணிந்து கொண்டே வந்தது. தாழ்வாரத்தில் தேங்கிய மழை நீர் வேகமாக சுழன்று மூலையில் இருக்கும் களிமண் குழாய்களின் வழியாக சப்தத்துடன் வெளியேறியது. திரையை விலக்கி ஜன்னல் வழியாகப் பார்த்தவளுக்கு பாறை மேட்டில் அமருடன் விளையாடிய நான்கிற்கு பதினான்கு குழிகள் உள்ள பல்லாங்குழிகளில் மழை நீர் நிரம்பித் தளுப்பிக் கொண்டிருந்தது தெரிந்தது. அமரின் நினைவு மட்டும்தான் அவளை இப்போது சூழ்ந்திருந்தது. எத்தனை தடவைகள் அவனுடன் அங்கு பல்லாங்குழி ஆடி இருப்பாள். ஒவ்வொரு முறையும் பதிவாக அமர் விளையாட்டில் தோற்கும் போதெல்லாம் மீண்டுமோர் முறை விளையாட வற்புருத்துவான். சோபியா காய்களை வேகு சாமர்த்தியமான வேகத்தில் குழிகளில் இட்டு நிரப்புவதை பார்த்துக் கொண்டே அவளையும் அறியாமல் அவளின் நீண்ட விரல்களைன் அழகை ரசிப்பான் அமர்.
மழை முற்றிலும் நின்றவுடன் பாறை மேட்டிற்குச் சென்று எல்லா குழிகளிலும் தேங்கி இருக்கும் மழை நீரினை கால் கட்டை விரலால் வேளியேற்றி அதனருகில் வந்தமர்ந்தாள். அமர் தன் முன் விளையாடுவதாக நினைத்துக் கொண்டு குழிகளில் காய்களை போடுவதாக அபினயித்தாள். அவளையும் அறியாமல் கண்களிலிருந்து வழிந்த நீர் பல்லாங்குழிகளில் பட்டுச் சிதறிய பிறகுதான் சுய நினைவிற்கு வந்தாள்.
திடீரென்று தன் முன் அசைந்த நிழலைக் கண்டு துணுக்குற்று தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். வாசனைத் திரவியங்களிட்டு பராமரித்த கருத்த கேசமும், கதுப்புக் கன்னக் குழிகளும், இணைந்த கவர்ச்சியான புருவங்களும், அரும்பத் துடிக்கும் வாலிப மீசையும் காட்டிக் கொடுத்து விட்டது, அவளை நோக்கி இருகைகளையும் நீட்டி அழைப்பது சோபியாவின் அன்பிற்கு பாத்திரமான அமர்தானென்று
.