பிரேம பிரபா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரேம பிரபா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  07-Dec-1956
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Mar-2013
பார்த்தவர்கள்:  705
புள்ளி:  184

என்னைப் பற்றி...

கிடைத்தால் மகிழ்வதற்கோ, மறுதலிக்கப்பட்டால் துக்கிப்பதற்கோ ஒன்றுமில்லை என்னிடன். வாழ்க்கையை அதன் போக்கிலேயே போக விடுகிறேன். அது என்னை வழி நடத்துகிறது. என் தனிமையை அழிக்கிறது. என்னை ஒரு குழந்தையாக பாவித்து முத்தம் கொடுக்கிறது. அனைத்துக்கும் மேல் என் கைகளைப் பிடித்து உலகத்தைச் சுற்றிக்காட்டுகிறது. தோளில் உட்காரவைத்து திருவிழாவைச் சுற்றிக்காட்டும் என் அப்பாவைப் போல, கதைகள் சொல்லும் கோமதிப் பாட்டி போல, தவறு செய்தால் தன் பார்வையினாலேயே என்னைத் திருத்தும் அம்மாவைப் போல

என் படைப்புகள்
பிரேம பிரபா செய்திகள்
பிரேம பிரபா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2019 10:13 pm

நட்ட கல்லும் பேசுமோ?
(நவ கண்டம்)
“என்னை முன் நில்லன்மின் தெவ்வீர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர்-திருக்குறள்

சேரமான் பெருஞ்சேரலாதன், பாண்டியன் மற்றும் ஒன்பது வேளிர் தலைவர்களுக்கும், சோழ மன்னன் கரிகால் சோழனிற்கும் நடந்த வெண்ணிப் போர் வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒரு முடிவிற்கு வந்தது. கரிகால் சோழன் இறுதியில் தன்னை எதிர்த்து நின்ற ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை முறியடித்து வெற்றி வாகை சூடினான். போரில் திருமாள் வளவன் எய்த நெடு வேல் சேரனின் மார்பைத் துளைத்து ஊடுருவிச் சென்று முதுகின் புறத்தே புண் செய்தது. இப்படிப் புண் செய்வது புறமுதுகிட்டு ஓடுதலிற்கிணையான வீரக் குறைபாடு என்று கர

மேலும்

பிரேம பிரபா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2018 11:20 am

சுவாசம் முட்டும் தனிமைச் சிறை. உயரத்தில் என்னை மட்டும் வினோதமாக வேடிக்கை பார்க்கும் ஒரே ஒரு ஜன்னல். காலையில் சிறிது நேரம் மட்டும் அந்த ஜன்னலில் இருக்கும் சிலந்தி வலையில் வெளிச்சம் பட்டு வெள்ளிக் கம்பி போல மினுமினுக்கும். இடது பக்க மூலையில் இருக்கும் அழுக்கேறிய கழிவறைப் பீங்கான் தரையைப் பார்க்கிலும் ஒரு இன்ச் கர்வமான உயரத்தில் எடுப்பாகத் தெரியும். காரை பெயர்ந்த ஈரமான சுவர்களின் குளிர்ச்சி அறை முழுவதும் நிரந்தரமாக பரவியிருக்கும். அறையின் கம்பிக் கதவின் வலது பக்க சுவற்றிற்குக் கீழ் இருக்கும் எலி வலையின் முன்பு குவியலான குரு மணலில் பாதி அழிந்த எலியின் கால் தடயங்கள் ஒன்றிரண்டு காணக் கிடைக்கும

மேலும்

பிரேம பிரபா - priyadharshini அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2018 7:49 pm

முகநூல் காதல் பற்றி என்ன எண்ணுகிறீர்கள் ?

மேலும்

இரு மனங்கள் உறவாடும் இடம் முகநூல். அதில் உண்மை இருந்தால் வெற்றி பெறலாம். காதல் முகம் பார்த்து வருவதல்ல மனம் பார்த்து வருவது. உண்மை அதில் முக்கியமான ஒன்று 03-Dec-2018 10:25 pm
இருநூறு ரூபாய் இண்டர்நெட் பேக், இதயங்களை இணைக்கமுடியும் என்றால் 21 ம் நூற்றாண்டுக்கு கொடுக்கலாம் சிறந்த புரோக்கர் பட்டத்தை... நல்ல வரிகள் 03-Dec-2018 3:46 pm
ஆமாம் 03-Dec-2018 3:45 pm
ஹா ஹா ஹா 03-Dec-2018 3:44 pm
பிரேம பிரபா - பிரியா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2018 11:56 am

1) நிம்மதி என்றல் என்ன??
2) நிம்மதி எங்கு கிடைக்கும் ??
3 ) நிம்மதியை ஏன் தேடுகிறோம் ??
நான் இந்த கேள்விக்கு சில பதில்கள் மனதில் வைத்துள்ளேன் ...அதை பிறகு கூறுகிறேன் ...
சற்று குழப்பத்தில் உள்ளதால் தெளிவு பிறக்க வேண்டி இக்கேள்வியே இங்கு கேட்டு உள்ளேன் நண்பர்களே ...பதிலளியுங்கள்

மேலும்

1. எதில் மனம் நிறைவு பெறுகிறதோ அதுவே நிம்மதி. 2. நடந்த, நடக்கும் நிகழ்வுகளை எந்த கண்ணோட்டத்தில் புரிந்து கொள்கிறமோ, அங்கே உள்ளது நிம்மதி நிலையான மதியோடு அணுகுதல் = நிம்மதி. 3. இரண்டு கேள்விகளுக்கு விடையளித்த நானும் அதை தேடுகிறேன். என்று நானும் எல்லாவற்றை சரியான கண்ணோட்டத்தில் கண்டு அதை பெறுகிறேனோ, அன்று நிம்மதி எங்கு கிடைக்குமென நிச்சயம் எழுதுவேன். 17-Jan-2019 7:10 pm
உங்கள் கருத்தை ஏற்கிறேன் 26-Nov-2018 2:15 pm
உங்கள் கருத்தை ஏற்கிறேன்...உங்கள் கருத்திற்கு நன்றி 26-Nov-2018 2:15 pm
எப்படி ...புரியும்படி விளக்கவும் .. 26-Nov-2018 2:14 pm
பிரேம பிரபா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2018 8:08 am

திருவண்ணாமலைக்கு செல்ல முன் பதிவு செய்தாயிற்று. ரமண மகிரிஷி ஆஸ்ரமத்தில் மூன்று நாட்கள் தங்குவதற்கு மின் அஞ்சலில் அனுமதியும் வாங்கியாயிற்று. பேருந்தில் அவ்வளவாகக் கூட்டமில்லை.ஜன்னல் அருகில் இருக்கும் என் இருக்கையில் அமர்ந்தேன். திருவண்ணாமலைக்கு குறைந்தது ஐந்து மணிநேரமாவது ஆகும். கைபேசியைப் பார்த்தேன். வழக்கத்திற்கு மாறாக வந்திருந்த அனைத்து குறுஞ்செய்திகளையும் படித்தேன். இடது பக்கம் இருக்கும் கைப்பிடியில் கை வைக்க வாகில்லாமல் அடியில் ஏதோ துருத்திக்கொண்டு இருப்பதைப் போல உணர்ந்தேன். கைப்பிடியை உயர்த்த அந்தப் பிளவில் சொருகிவைத்த கத்தைப் பேப்பரை உருவி எடுத்தேன். அது ஒரு கையெழுத்துப் பிர

மேலும்

பிரேம பிரபா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2018 9:22 pm

சிக்னல்
கிரீச்ச்ச்!!.. வேகமாக வண்டியை நிறுத்தினேன். “பாவி, எங்கிருந்துதான் வந்தானோ என்று” என்று நான் நினைப்பதற்குள் சாலை சந்திப்பில் மஞ்சள் நிறம் சிகப்பிற்கு மாறியிருந்தது. விரலின் நுனிகளால் எஃப் எம்மில் ஒலிபரப்பான ஏதோ ஒரு பாட்டிற்கு ஸ்டியரிங் வீலில் தாளம் போட்டுக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தேன். மனது எங்கெங்கோ அலைந்து திரிந்தது. ஒரு சுற்று போய் வந்தேன்.
முதல் வேலையாக அந்தோணியையும் கொஞ்சம் வேலை பார்க்க உந்தித் தள்ளவேண்டும். எப்படியும் இந்த வார இறுதிக்குள் பிராஜெக்டை முடித்துக் கொடுக்கவேண்டும். இல்லையென்றால் கடுவன் பூனை எங்கள் இருவரையும் பிராண்டிக் கொன்றுவிடும்.
அகத்தியன் மிகவும்

மேலும்

பிரேம பிரபா - பிரேம பிரபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2018 11:11 am

“மாத்யூ ஃபெர்ணாண்டஸ், மன நல மருத்துவர். கேட்டில் மாட்டியிருந்த பித்தளை பெயர்ப்பலகை சூரிய ஒளியில் பளபளத்தது. எங்கு பார்த்தாலும் நெடிய மரங்கள். முதன் முதலாய் இங்கு வருபவர்கள் ஏதோ பண்ணை வீட்டிற்குப் போவது போல முதலில் உணர்வார்கள். இதுவரை தாங்கள் அனுபவித்த நகர நெரிசலையும் வாகன இரைச்சலையும் தற்காலிகமாக மறந்து விடுவார்கள். தூரத்தே தெரியும் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பெரிய வீட்டின் வரவேற்பரையில் இருக்கும் விலையுயர்ந்த சோபாவின் நுனியில் தயக்கத்துடன் அமர்ந்திருந்தான் ரிஷி. “பிளீஸ் கம் இன்” ஆளில்லாத அந்தப் பெரிய வரவேற்பரையின் சுவர்களில் பட்டு எதிரொலித்தது அந்த மந்திரக் குரல். மேஜையில் எதையோ

மேலும்

நன்றி ஆரோ. மிகவும் மகிழ்ச்சி 19-Jun-2018 9:44 pm
செம... கலக்கல் ..... அருமை... தூள்... என்ன வென சொல்லலாம் அந்தளவுக்கு அருமையா இருக்கு... தொடர்ந்து எழுதுங்கள். 05-Feb-2018 1:50 pm
பிரேம பிரபா - பிரேம பிரபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-May-2018 6:35 pm

மழையைக் குறித்தான என் அனுபவங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. முதலில் என் சக விளையாட்டுத் தோழனின் பார்வையிலிருந்து சிறிது மாறி கண்டிப்பான பெரிய மனித தோரணையில் என்னைக் கண்டிக்கவும் செய்தது. கூடுதலாக உங்களுக்கு ஒரு ரகசியம். மழையும் மனிதர்களைப் போலத்தான். சில சமயம் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது நம்மையும் சேர்த்து உற்சாகப்படுத்தும். சில சமயம் சோகமாகன சிணுங்களில் ஆரம்பித்து ஆர்ப்பரிக்கும். என் வாழ்க்கையின் முக்கியமான அனைத்து நிகழ்வுகளையும் ஞாபகப்படுத்திக் கூற பல சமயங்களில் இந்த மழை உதவி இருக்கிறது. அடர் மழைப் பொழிவில் நான் தனியாகக் கார் ஓட்டும் போது வைப்பரின் சீர

மேலும்

தங்களின் பதிவிற்கு நன்றி. இது போன்ற பாராட்டுக்கள்தான் ஒரு படைப்பின் முழு வெற்றி. மகிழ்ச்சி ஆரோ. 10-Jun-2018 10:20 am
சிலகதைகளை படிக்கும்போதுமட்டுமே சிகலாய்க்க தோன்றும் அப்படி நான் படித்து ருசித்து மகிழ்ந்த கதைகளில் உங்களின் இந்தக்கதையும்.... ஒன்று; என்னே ஒரு எழுத்து நடை; அருமையான வருணனைகள், அற்புதமான கருத்து...... நல்ல கதை. எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள். மழையில் நனைந்த அனுபவம் தந்த உங்களுக்கு என் நன்றிகள்...... 09-Jun-2018 2:50 pm
பிரேம பிரபா - பிரேம பிரபா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2017 9:55 pm

ஊரின் எல்லையில் அந்த முதியோர் இல்லம் இருக்கிறது. வார்டன் மூதாட்டியையும் சேர்த்து இருபது பேர்கள்தான் அங்கு தங்கி இருக்கிறோம். சுற்றிலும் நெடிய மரங்கள். பல வருடங்களுக்கு முன் பூசிய சுண்ணாம்புப் பூச்சு உதிர்ந்து ஆங்காங்கே செங்கல் வரிசைகள் பளிச்சென்று கண்ணை உறுத்தும்.
“ராமன்னா, ஊணு கழிக்கான் வரில்லே? இப்பவே மணி பத்தாவுது. சாப்பிட்டிட்டு மாத்திரை போட்டுக்க வேண்டாம்!” மலையாளத்திலும் தமிழிலும் கலவையான ஒரு மொழியில் பேசிக்கொண்டே வந்த வார்டன் மூதாட்டி என் கையில் இருக்கும் மண்வெட்டியை உரிமையுடன் பிடுங்கிக்கொண்டு வேகமாக எனக்கு முன்னே நடந்தாள். நானும் அதற்கு மறுப்பேதும் கூறாமல் அவரைப் பி

மேலும்

என்னை உற்சாகப்படுத்தியதிற்கு மிகவும் நன்றி. 05-Feb-2018 10:57 am
அருமையான கதை. தொடர்ந்து எழுதுங்கள். 07-Apr-2017 2:19 pm
பிரேம பிரபா - பிரேம பிரபா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2015 9:44 pm

சிற்பியின் காதலி

கி.மு. 353 நூற்றாண்டிலிருநு 350 வரையிலான காலம். தலை நகரில் இருக்கும் சிற்பக் கூடத்தில் உளிச் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கோண்டே இருந்தது. நான்கு மாதங்களாக டிமோதியஸ் வடிவமைத்த அந்த பெண்ணின் சிற்பம் பூர்த்தியாகும் நிலையிலிருந்தது. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் சிலையின் அழகு பன் மடங்காகத் தெரிந்தது. சிலையின் கண்களை மட்டும் திறப்பதற்காக முழுப் பௌர்ணமி நாளை தேர்ந்தெடுத்து இருந்தான் டிமோதியஸ். அகன்ற தோள்கள், நெற்றியில் இழையோடும் கற்றைச் சுருள் முடி, மிகக் குறைவான ஆபரணப் பொலிவுடன் வடிவமைக்கப்பட்ட சிலையில் இயற்கையின் அழகு கூடுதலாகவே இருந்தது. இடுப்பில் இழைந்தோடும் கச்சையின் இற

மேலும்

பிரேம பிரபா - பிரேம பிரபா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Sep-2014 7:38 pm

“பயணிகளின் இனிய கவனத்திற்கு. ரயில் எண் 6010 மும்பாய் மெயில் மூன்றாவது பிளாட்பாரத்திலிருந்து இன்னும் சற்று நேரத்தில் புறப்பட இருக்கிறது” ஒலிபரப்பாளர் தேவையான ஏற்ற இறக்கங்களுடன் கணீர் என்று உச்சரித்தார். சபாபதி கடிகாரத்தைப் பார்த்தார். மணி இரவு ஒன்பது ஐம்பத்தைந்து. ஜன்னலின் வழியாக ரகுவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு “ரகு, பார்த்துடா. அடிக்கடி போன் பண்ணு” சபாபதியின் வார்த்தைகள் சோகத்தில் சுருங்கின.
எந்தச் சந்தர்ப்பத்திலும் கண்களில் நீரை வரவழைக்கவோ அல்லது கவலையை முகத்தில் அப்பட்டமாகக் காட்டக் கூடாது என்று பிடிவாதமாக இருவரும் இருந்தனர். மனது முரண்டு பிடித்தது. அப்பா சில நாட்களில் எப்படி இவ்வளவு மா

மேலும்

பிரேம பிரபா - பிரேம பிரபா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Sep-2014 7:47 pm

அடுத்த நாள் வாராந்திர விடுமுறை என்று நினைத்தவுடனேயே, எந்த வித முன்னறிவுப்பும் இல்லாமல் ஒட்டு மொத்த சோம்பேறித்தனமும், விக்கிரமாதித்தியனின் தோளில் ஏறி அமர்ந்து இறங்க அடம் பிடிக்கும் வேதாளம் போல உடம்பு முழுவதும் அப்பிக்கொள்ளும். ஆறு நாட்களாக ஏங்கித்தவித்த காலைத் தூக்கத்திற்கு மனம் கனவு காண வைக்கும். இப்படியான ஒரு காலைத் தூக்கத்தை துளியும் இரக்கம் இல்லாமல் கெடுத்தது ஒரு நண்பனின் திடீர் வருகை. "என் தோழி பாமா காலை பத்து மணிக்கு கா•பி ஷாப்பிற்கு வருவதாக கூறியிருக்கிறாள். நீயும் தயாராயிரு" என்று என் பதிலுக்குத் துளியும் காத்திருக்காமல், பேப்பரை வாசலில் விட்டெறிந்து விட்டு சிட்டாய் பறந்து போகும் பேப

மேலும்

நல்ல பதிவு நண்பரே.. மேலாக , "அலகுகளால் செதுக்கிய கூடு " கண்டேன். ரசித்தேன் உங்கள் கவிதைகளையும், எல்லோரின் கவிதைகளையும். -கவித்தாசபாபதி 04-Oct-2014 2:24 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (32)

MOSES R

MOSES R

saudhi
அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (32)

RATHNA

RATHNA

தூண் & துரும்பு

இவரை பின்தொடர்பவர்கள் (33)

v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ]

v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ]

மயிலம்பாவெளி ,மட்டக்களப்
RATHNA

RATHNA

தூண் & துரும்பு

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image

பிரபலமான எண்ணங்கள்

மேலே