v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ] - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ] |
இடம் | : மயிலம்பாவெளி ,மட்டக்களப் |
பிறந்த தேதி | : 10-Oct-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 1003 |
புள்ளி | : 318 |
மற்றவர்கள் என்னை புரிந்து கொள்ளவேண்டுமென்றோ,அல்லது அவர்களுடைய பார்வைகளுக்கு நான் தப்பில்லாதவனாக தெரியவேண்டும் என்பதற்காகவோ ஒரு போலியான வாழ்வை வாழ நான் விரும்பவில்லை.
சிசுவாக நீயிருந்தால்
கருவறையை காதல் செய்.
உதிரத்தால் உரு வளர்க்கும்
அன்னையை காதல் செய்.
உதயத்தை காணவே
களிப்புடன் காத்திருக்கும்
தந்தையை காதல் செய்.
தவழ்ந்திட துடிக்கும்
தாய் மண்ணை காதல் செய்.
தாய் மண்ணில் தவழ்ந்திடும்
தாய் மொழியை காதல் செய்.
கருவறைக் காதல் தான்
காசினியில் கல்லறைக்கே
நீண்டு வரும்.
கலங்காமல் நீயும்
கருவறைக்குள் காதல் செய்.
தாய் வயிற்றில் தளிர்த்திடும் காதல் தான்
தரணியில் நிஜமாகும்.
மழலையாய் மலர்ந்திட்டால்
மனம் நாடும் இசையினைக் காதல் செய்.
அகம் குளிரும் தாயவள்
தாலாட்டைக் காதல் செய்
காலை எழுந்தவுடன் கன்னத்தில்
முத்தமிட கட்டியணைக்கின்ற
சிசுவாக நீயிருந்தால்
கருவறையை காதல் செய்.
உதிரத்தால் உரு வளர்க்கும்
அன்னையை காதல் செய்.
உதயத்தை காணவே
களிப்புடன் காத்திருக்கும்
தந்தையை காதல் செய்.
தவழ்ந்திட துடிக்கும்
தாய் மண்ணை காதல் செய்.
தாய் மண்ணில் தவழ்ந்திடும்
தாய் மொழியை காதல் செய்.
கருவறைக் காதல் தான்
காசினியில் கல்லறைக்கே
நீண்டு வரும்.
கலங்காமல் நீயும்
கருவறைக்குள் காதல் செய்.
தாய் வயிற்றில் தளிர்த்திடும் காதல் தான்
தரணியில் நிஜமாகும்.
மழலையாய் மலர்ந்திட்டால்
மனம் நாடும் இசையினைக் காதல் செய்.
அகம் குளிரும் தாயவள்
தாலாட்டைக் காதல் செய்
காலை எழுந்தவுடன் கன்னத்தில்
முத்தமிட கட்டியணைக்கின்ற
மாலைக்கனவில்
உன் நிழல்
மனதை தொடுது,,
என்னில்,,,,
செவ்வான நிழல் கூட
உன் கூந்தலில்
பூவாகுது ,,,
கூவிய குயில் கூட ,,,
கூடவே இருந்து
உன் குரல் கேட்க்குது ....
கவிஞர் ; வி.விசயராஜா[மட்டு நகர் இளையதாரகை]
முடிவறியாத
பிரிவால்
வழிமாறி தவிக்குது
இதயம் ஒன்றே ,,,,,
கனவும் நினைவும்
துணையே
துடிக்கின்ற இதயம் ஒன்றுக்கே ,,,
கவிஞர் ; வி.விசயராஜா[மட்டு நகர் இளையதாரகை]
கங்கையும்
மங்கையும்
கண்ணில் தான் ,,,,
காதலில் தோல்வி என்றால் மட்டும்
கவிஞர் ;
வி.விசயராஜா[மட்டு நகர் இளையதாரகை]
தூறல் மழையில் நனைந்த துப்பட்டா
என் தோலில் விழுந்த தப்பண்டா
காதல் மலர்ந்த
கொடிபோல காட்சி தருகுது கண்ணுக்கு
நூல் கொண்ட
உன் ஆடையில் நுனி கொண்டு ஆடுது ,,,,,,,
என் மனதில் ,,,,,
கவிஞர் ;
வி.விசயராஜா[மட்டு நகர் இளையதாரகை]
புகைத்து பார்த்தாலும்
புன்னைகைத்த
பெண்ணை நினைத்து
பார்க்காதே ,,,,,,
அவள் சிரிப்பு
உன்னில்
கண்ணில் விழும்
நெருப்பு ,,,,,,
ஒராட்டும்
சத்தம் ஒரு கணம்
உறங்க வைத்தாலும்
ஒரு கைபுடி
அமுது என் வயிற்றை
நிறைய வைத்தாலும்
நீ காட்டும் பாசமும்
நேசமும் ,,,
என் நெஞ்சில் நிறைய
நித்தமும்
நித்திரை செய்கின்றேன்
நிம்மதியாய் ,,,,,,,,அம்மா
கவிஞர் ;
வி.விசயராஜா[மட்டு நகர் இளையதாரகை]