ஓ பாமா, ஒபாமா

அடுத்த நாள் வாராந்திர விடுமுறை என்று நினைத்தவுடனேயே, எந்த வித முன்னறிவுப்பும் இல்லாமல் ஒட்டு மொத்த சோம்பேறித்தனமும், விக்கிரமாதித்தியனின் தோளில் ஏறி அமர்ந்து இறங்க அடம் பிடிக்கும் வேதாளம் போல உடம்பு முழுவதும் அப்பிக்கொள்ளும். ஆறு நாட்களாக ஏங்கித்தவித்த காலைத் தூக்கத்திற்கு மனம் கனவு காண வைக்கும். இப்படியான ஒரு காலைத் தூக்கத்தை துளியும் இரக்கம் இல்லாமல் கெடுத்தது ஒரு நண்பனின் திடீர் வருகை. "என் தோழி பாமா காலை பத்து மணிக்கு கா•பி ஷாப்பிற்கு வருவதாக கூறியிருக்கிறாள். நீயும் தயாராயிரு" என்று என் பதிலுக்குத் துளியும் காத்திருக்காமல், பேப்பரை வாசலில் விட்டெறிந்து விட்டு சிட்டாய் பறந்து போகும் பேப்பர்காரப் பையனைப்போல நொடியில் மாயமாய் மறைந்து போனான் அந்த நண்பன். கட்டிலுக்கருகில் இருக்கும் கை பேசியைப் பார்க்க மணி ஏழாகியிருந்தது. ஒரு குட்டித் தூக்கத்திற்கு ஆரம்பக்கட்ட முயற்சிகள் செய்து தோற்றும் போனேன். பாவி, எங்குதான் திட்டம் போட்டானோ தெரியவில்லை. என் காலைத்தூக்கத்தை மொத்தமாக வாரிச் சுருட்டி அவனுடனேயே எடுத்துக் கொண்டு போய்விட்டான்.

ஒன்பது மணிக்கே என்னை துரிதப்படுத்தினான். ஒன்பது பத்திற்கு அருகில் இருக்கும் காஃபி ஷாப்பில் இருந்தோம். நான் இது போன்ற கடைகளை விளம்பரத்தில் பார்ப்பதோடு சரி. அங்கு போய் காஃபி குடிக்கவேண்டும் என்று ஒரு நாளும் நான் நினைத்ததே இல்லை. அதற்கு என் சுருங்கிப்போன பொருளாதாரமும் ஒரு காரணம். நண்பனின் வற்புறுத்தலால் கடைசியில் வர வேண்டியதாயிற்று. மூலையில் இருந்த இருக்கைகளைக் காட்டி உட்காரலாம் என்றான். அதிகப்படியான குளிர். என் விரல்கள் மெல்ல நடுங்க ஆரம்பித்தது. என் நண்பனைப் போல என்னால் வெகு இயல்பாக உட்கார முடியவில்லை. கொஞ்சம் குளிரின் அளவைக் குறைக்கச் சொன்னால் அமெரிக்கக் குளிரை தாக்குப்பிடிக்காத இந்தியப் பிரஜை என்று என்னை ஓரம் கட்டி விடுவார்களோ என்று அஞ்சி நானும் அந்த குளிரை அனுவிப்பது போல நடிக்க, இல்லை நடுங்க ஆரம்பித்தேன்.

மேஜையின் மேல் இருக்கும் வண்ணமிகு விலைப்பட்டியலைப் பார்க்க தலை தட்டாமாலை சுற்றியது. ஒரு கா•பி குறைந்தது ரூபாய் அறுபதிலிருந்து இருநூறு வரை இருந்தது. மதுரையில் இருக்கும் கௌ¡¢ ஹோட்டல்தான் உடனே என் ஞாபகத்திற்கு வந்தது. சுடச்சுட டபரா பில்டர் கா•பி பன்னிரண்டு ரூபாய்தான். குடித்த பிறகும் கூட ஒரு மணி நேரம் வரைக்கும் கா•பியின் மணம் தொண்டைக் குழியில் சிறிதும் வற்றாமல் இருக்கும். சுற்றும் முற்றும் பார்த்தேன். நண்பனோ ஐபேடீல் மேற்கத்திய துள்ளல் இசையை நிச்சயம் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும். தோளை அங்கும் இங்கும் ஆட்டியபடி மெய் மறந்த நிலையிலிருந்தான். ஜோடி ஜோடியாக வர ஆரம்பித்தார்கள். ஒருவருக்கொருவர் ரகசியமாக சீண்டிக்கொள்வதும், பிறகு செல்லமாக முணுமுணுப்பதுமான குறும்படங்கள் என் கண் முன்னே இலவச இணைப்பாக ஓடிக் கொண்டிருந்தது. அடுத்து ஒரு மத்திய வயதில் ஒரு யுவதி விலை உயர்ந்த நறுமணத்தை எங்கள் நாசியில் திணித்தவாறு எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தார்.




ராமாயணத்தின் ஒரு பகுதியான சுந்தர காண்டத்தின் மூலப்பிரதியைப் போல மூன்று பங்கு தடிமனான இறக்குமதி செய்யப்பட்ட ஒரு புத்தகத்தை மேஜையின் மேல் பரப்பினார். நாம் ரகசியங்களைப் பேசிக்கொள்வோமே அந்தக் குரல் ஸ்தாயில் பாதி குறைத்துத்தான் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். கல்லூ¡¢ வி¡¢வுரையாளர் பாடம் நடத்தும் போது இதைப் போன்ற அமைதியை இந்த இளைஞர்கள் கடைப் பிடிப்பார்களா என்று எனக்கு நிச்சயமாகத் தொ¢யாது.

கடைசியாக பத்தரை மணி வாக்கில் என் நண்பனின் தோழி வந்தாள். அகன்ற புன்னகையுடன் நின்று வரவேற்றான் நண்பன். முதல் கட்ட பரஸ்பர அறிமுகம் நடந்தேறியது. "இவன் தான் என் நண்பன் தமிழ் இள வேல்" என்று என்னை அறிமுகப்படுத்தியதும், துளியும் பொருந்தாத இடத்தில் நான் இருக்கிறேனோ என்ற சந்தேகத்தை என்னுள் எழுப்பியது தோழியின் உதட்டுச் சுழிப்பும் அகன்று வி¡¢ந்த விழிகளும். இறக்குமதி செய்யப்பட்ட பல விஷயங்களைப் பறறி பேச ஆரம்பித்தாள் தோழி. எனக்கான கருத்துக்களை பதிவு செய்ய முடியாத வேகத்தில் இருந்தது அவளின் தொடர் ஆங்கில நடை. தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தாள். என் நண்பனோ அவளை மிகவும் பெருமையாகப் பார்ப்பதும் பிறகு என்னைப் பார்ப்பதுமாக இருந்தான். ஸ்விஸ் சாக்லெட், இத்தாலியன் பாஸ்தா, அமொ¢க்க அரசியல், ஆஸ்திரேலியக் கல்வியின் தற்போதைய நிலை என்று கண்டம் விட்டு கண்டம் தாண்டிக் கொண்டேயிருந்தாள்.எந்த ஒரு நிலையிலும் அவள் இந்தியாவிற்கு வரவேயில்லை. கடைசியாக டாலா¢ன் திடீர் வீழ்ச்சி குறித்து முகத்தை சோகத்துடன் வைத்து பேசும் போது அவள் கண்களின் ஒபாமா தொ¢ந்தார். நான் நெளித்து கொண்டிருப்பதைப் பார்த்த நண்பன் என்ன வேண்டும் என்று கேட்டான். ஒரு எஸ்பிரஸ்ஸோ என்றேன். ஆகக் கூடி நான் சில சமயங்களில் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் அந்த கா•பியைக் குடித்த அனுபவத்தில் கூறினேன். "ஒன் எஸ்பிரஸ்ஸோ ரெகுலர், டூ ஐ¡¢ஷ் " என்று நண்பனின் தோழி ஆர்டர் செய்தாள். அவர்களுக்கு ஈடு கொடுக்கும் உயரத்தில் நான் துளியும் இல்லை என்பது மட்டும் தோழியின் பார்வையிலேயே பட்டவர்த்தனமாகத் தொ¢ந்தது. அங்கு நடப்பதையெல்லாம் பார்க்கும் போது நண்பனுக்கு எந்த வித பொது மன்னிப்பிற்கும் இடம் கொடுக்காமல் தூக்கிலிடவேண்டும் போலிருந்தது. ஒரு கா•பிக்காக தனி ஆவர்த்தனம் செய்து குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு இருவரும் தாக்குப்பிடிப்பார்கள் என்று மட்டும் தொ¢ந்தது. இது போன்றவர்கள் தற்காலிக பணக்காரர்களாக தங்களை அடையாளப்படுத்த அபிநயிக்கிறார்களோ இல்லையோ, நேரடியாக ஒபாமா வீட்டுக் கொல்லைப்புரத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அழுகல்களையும், காலாவதியான விஷயங்களையும் நாகா£கம் என்ற பெயா¢ல் நம்மவர்களிடம் பரப்புகிறார்கள் என்று மட்டும் நிச்சயம் உணரமுடிந்தது.


1876 ஆம் ஆண்டு கல்கத்தாவில் இருக்கும் கல்லூ¡¢ச்சாலையில் இந்தியன் கா•பி ஹௌஸ் முதன் முதலாகத் தொடங்கப்பட்டது. கலைஞ்ர்கள், கவிஞ்ர்கள்,பிரபலமான அரசியல்வாதிகள், அறிவு ஜீவிகள் என பல மனிதர்களை ஒன்றிணைத்த பெருமை இந்த கா•பி ஹௌசுக்கு உண்டு. சா¢த்திரப் புகழ் வாய்ந்த இந்த இடம்தான் ரபீந்தரநாத் தாகூர், சுபாஸ் சந்திர போஸ், புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே, மிருளா சென், போன்ற ஆளுமைகளின் கருத்துப் பட்டரைகளாக இருந்திருக்கிறது.. இளைஞர்களின் ஆறிவுத்தாகத்தை தணிக்கும் ஒரு இலக்கியக் கூடமாகவும் இருந்திருக்கிறது. 1940 இல் இருந்து 1970 வரை இருந்த இது போன்ற கா•பி ஹௌஸ்கள் கோக், பெப்சியின் வருகையால் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது.





நம்முடைய கலாச்சாரம் மிகத் தொன்மையான ஒன்று. உலக சா¢த்திரத்தை மெருகேற்றியது நம்முடைய கடந்த கால சாதனைகள். ஆனால் இப்போது நம் நிலைமையை நினைத்தால் மிகவும் கவலைக்கிட்மாக உள்ளது. மேற்கத்தியக் காலாச்சாரச் சீர்கேட்டில் சிறுகச்சிறுக சிதைந்து கொண்டிருக்கிறோம். எங்கள் வீட்டுப் பாட்டிகள் கை மணக்கப் போடும் இந்த பில்டர் கா•பிக்கும், உருளைக் கிழங்கு சிப்ஸ¤க்கும் தனிப்பட்ட அறிவியல் என்ற முத்திரை குத்தப்பட்டு தனி விலைக்கு வாங்கினார்களா? அல்லது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அடிப்படையில் ஒபாமாவிடம் இருந்து இலவசமாக்ப் பெற்றார்களா தொ¢யவில்லை. நம் வீட்டுப் பொருட்களை நமக்கே அதிக விலைக்கு விற்று அவர்களின் அழுகல் கலாச்சாரத்தையும் நம்மிடம் விற்கும் தந்திரத்தைத்தான் அவர்கள் தாராள மயம் என்று கூறுகிறார்களோ என்னவோ?

எழுதியவர் : பிரேம பிரபா (27-Sep-14, 7:47 pm)
பார்வை : 131

சிறந்த கட்டுரைகள்

மேலே