பெண்ணியம்

இயற்கையின் படைப்பில் இருவேறு இனங்கள் ஆணும்,பெண்ணுமாய் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டியவர்கள்.கற்காலத்தில் , தனக்கு வேண்டிய உணவை தானே ஆணும்,பெண்ணும் சேர்ந்து வேட்டையாடி உணவாக்கி வாழ்ந்தனர்.

நாகரீகம் வளர,வளர மனிதன் ,தான் ஈட்டிய பொருள் அனைத்தும் தன்னுடைய பரம்பரையாக,தன் வழிதோன்றல்கள் மட்டும் அனுபவிக்க சேர்த்து வைக்க தொடங்கினான் .குடும்பம் என்ற கட்டமைப்பை உருவாக்கினான்.

திருமணம் என்ற உறவுமுறை வந்தது.தான் மணந்த பெண்ணை தன்னையும்,தன்னால் விளைந்த குழந்தைகளையும் பராமரிக்குமாறு பணித்தான்.பெண்ணின் உடல் பிள்ளை பேற்றின் போதும் ,இயற்கையாக சில நேரங்களில் தளர்வதாலும் வீட்டை கவனிக்க பெண்ணையும் ,பொருள் கொணர தன்னையும் ஆட்படுத்தினான்.

பெண்ணகளின் உரிமைகள் முடக்கப்பட்டன .விட்டு கொடுத்து ,ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டிய உறவானது உயர்ந்த,தாழ்ந்த இனப்பாகுபாடாய் மாறியது.தன் சக தோழியை
வீட்டு விலங்கு ஆக்கினான்.

தன் சேவைகள் செய்யும் அடிமையாக,பிள்ளை பெரும் இயந்திரமாக ,போகப்பொருளாக ஒடுக்கப்பட்டவளாக நடத்தினான்.

'அடிமை சிங்கிலிக்கு' ஆசைப்பட்டவளும்' கல் ஆனாலும் கணவன் என்றாள்'
'புல் ஆனாலும் புருஷன்' என்றாள்.கணவன் சேவையே பாக்கியம் என கிடந்தாள்.குடிக்கி அடிமை என்றாலும்' கொண்டவன் அவன்' என்றாள்.அடித்து உதைத்தாலும்' என் அண்ணல் அவன் 'என்றாள்.பாத்திரம் கழுவி,நெளிந்து,நெகிழ்ந்து சுயம் இழந்தாள்.

விழித்தது சமூகம்.போர்க்கொடி ஒன்று பட்டொளி வீச பாடசாலை புகுந்தாள்.ஆணுக்கு நிகர் நான் என அலுவலகம் எங்கும் நிறைந்தாள்.படிப்பறிவை பெருக்கியவள் பேசிய பெண்ணியம் என்ன?

ஆடை................ ஆணுக்கும் ,பெண்ணுக்கும் சமமா?சமம் ஆகுமா?
இயற்கையின் படைப்பில் வித்தியாசம் உண்டல்லவா?
படிப்பறிவு மட்டும் போதுமா?உலக அறிவு என்று ஒன்று வளர்த்தாயா?
இன்னும் செய்தி கேட்கும் கணவரிடம் சண்டைபோடுவது என்ன?
என் நெடுந்தொடர் என்ன ஆயிற்றோ? என்பதே .............

இன்னும் அடிமையாய் பெண்மை
உடை
முகபூச்சு
நெடுந்தொடர்
பக்கத்து வீட்டு பேச்சு

அறிவு விடுதலை எப்போது பெறுவாய்?


படித்த பெண்கள் கூட 'என் வீட்டுக்காரர் அடித்து விட்டார் மேடம் .....வலிக்குது என்ன என்று பாருங்கள் என்று சிகிச்சைக்கு வரும் போது' உண்மையில் என் மனம் வலிக்கிறது.




அதே போன்று ,
படித்த பெண்கள் தன் கணவர் எப்போதாவது தான் குடிப்பார்
என்றும் அது தவறு என்ற மனோபாவம் இல்லாமல் இருப்பதை பார்த்தால் குமட்டி கொண்டு வருகிறது.'அறிவற்ற ,கீழ்த்தர பெண்களாகவே தோன்றுகிறது .



பெண்களின் அறிவு வளரட்டும்
பெண்மை மிளிரட்டும்

எழுதியவர் : கௌதமி தமிழரசன் (27-Sep-14, 1:35 pm)
சேர்த்தது : gowthami
Tanglish : penniam
பார்வை : 242

மேலே