ஒரு பிலேட் விஷம்
"ஆதி மனிதன் பசியால் உணவையும் பயத்தால் கடவுளையும் ஒரு சேரத் தேடத் தொடங்கினான் " என உணவின் வரலாறு புத்தகத்தில் பா.ராகவன் கூறி இருப்பார் .
ஆனால் இரண்டுமே பயம் தருவதாகி விட்டது , உங்களுக்கு தெரியுமா ?
நேரடியாக வருகிறேன் . இந்த கட்டுரையை படிக்கும் பீட்டர்கள் மதிய நேரமின்மைகள் நடுவே " வா மாப்ளே , வித்தியாசமா இன்னிக்கு சிக்கன் fried rice சாப்டலாம் ' என்று சொல்லும்போது நினைக்கலாம் ,
இல்லை என்றால் " போடி போக்கத்தவளே ..வீட்ல இருந்து கட்டிக்கிட்டு வந்த டப்பாவ office boy கிட்ட கொடுத்துடு . lets have a tasty food " என்று சொல்லும் மேரிக்களும் நினைக்கலாம் .
இல்லன்னா " வலது கைல சிக்கன் 65 சாப்டாதான் மச்சி இடது கைல இருக்கிற சரக்கு ,போதி
மரம் ஆகிறது " என்று என்னை போன்ற ராம்களாவோ இருக்கலாம் .
சரி இப்போது ....
துரித உணவில் என்னென்ன பயன் படுத்துகிறார்கள் ?
1. நீங்கள் சாப்பிடும் fast food கடைகளில் சிக்கன் சிவப்பாக இருக்கிறேதே ? ஏன் ? அது சிகப்பாக "ஆரஞ்சு ரெட்" என்ற பௌடரை உபயோக படுத்திகிறார்கள் . இந்த பௌடரை கடைகளில் நீங்கள் நேராக கேட்டால் தர மாட்டார்கள் .அது தடை செய்யப்பட்ட பொருள் .
அதை நீங்கள் வெறுமனே விரல்களில் தடவினால் அந்த நிறம் போவதற்கே இரண்டு நாள் ஆகும் .ஆனால் அது உங்கள் வயிற்றுக்கெ சென்று சேருகிறது . என்னாகும் ? யோசித்து பாருங்கள் ?
2.சோயா சாஸ் - இந்த சோயா சாஸ் ருசிக்காக துரித உணவுகளில் சேர்க்கப் படுகிறது . இது விலை அதிகம் . அதனால் அப்படியே ஊற்ற மாட்டார்கள் . அதோடு பழைய எண்ணெய் ( ஒரு வராம் ஆனது உகந்தது ) கலந்து ஊற்றி விடுவார்கள் .
3. இது இல்லாமல் , அரிசியோடு , சிக்கன் , முட்டை , காய்கறி ஒட்டக கூடாது என இன்னும் எண்ணெய் ஊற்றுவார்கள் .இந்த எண்ணெய் நீங்கள் உங்கள் வீட்டில் பார்க்கும் தொலைகாட்சியில் அழகு தேவைதைகள் சிபாரிசு பண்ணும் தினம் தோறுமோ / சூர்யகாந்தியோ இல்லை . மிக மலிவான அனைத்து கொழுப்புகளும் கலந்த ஒரு பழைய எண்ணெய் . அவ்வளவே .
4 . அடுத்து இந்த அத்துனை விஷங்களையும் சமைக்கும் கடாயை ஒரு வாரம் ஆனாலும் கழுவ மாட்டார்கள் .ஏனெனில் அது கழுவி விட்டால் உள்ளிருக்கும் எண்ணெய் பிசிபிசு பொய் விடும் . அது போய் விட்டால் எரிபொருள் ( LPG நிறைய செலவாகும் ) .அதனால் கடாய் எப்போதும் எண்ணெய் ஆகத்தான் இருக்க வேண்டும் .
இதன் பெயரே கும்பிபாகம் என்று கருடபுராணமும் , சியானும் சேர்ந்து சொல்லினர் .சொல்லியும் நான் சாப்பிடுவேன் என்றால் உங்களுக்கு கிருமிபோஜனம்தான்.
5. அடுத்து WHITE PEPPER ( வெள்ளை மிளகு ) . இதை வைத்து உங்களுக்கு ஒரு தட்டு , சிக்கன் ரைசை மலிவு விலையில் கொடுக்க முடியாது . அதனால் அதிலும் DUPLICATE .
கோல மாவு கலந்த வெள்ளை மிளகுகள் வாங்கி / கலந்து ...கருப்பை வெறுக்கும் உங்களுக்கு வெள்ளை ராட்சசி வந்து ஊட்டுவாள் விஷத்தை.
5. அஜினோ மோட்டோ - அந்த கருமத்தை உங்கள் நாவில் வெறுமனே எடுத்து தடவி ரெண்டும் நிமிஷம் கழித்து பாருங்கள் . நாக்கு மரத்திருக்கும்.
அது ருசியான பொருளும் அல்ல .அது நல்ல ருசியை மறக்கவும் செய்து , கெட்ட ருசியை தூண்டுகிற சுரபியை அதிக படுத்துகிறது .
6 . அடுத்து பச்சை / சிவப்பு CHILLY POWDER - இதை நீங்கள் ஒரு நாளேனும் மளிகை லிஸ்டில் எழுதியதுண்டா ? . மிளகாய் பொடி வேறு . இது பொடி அல்ல . மிளகாய் பொறி .!
7 . கடைசியாக இந்த பொருள்களையோ / நீங்கள் சாப்பிடும் FAST FOOD யோ ஒருமுறை முகர்ந்து பாருங்கள் . நீங்கள் ஆசையாய் வளர்க்கும் ஜிம்மிக்கு / நிம்மிக்கு கூட போட மாட்டீர்கள்.அப்படி போட்டால் அது கண்டிப்பாக உங்களை கடித்து விடும் .
சரி . இதை எல்லவற்றையும் கலந்து ஐந்து நிமிடத்தில் எட்டு ஐட்டம்கள் செய்வார்களே .!! . பார்த்திருப்பீர்கள் .
ஐந்து நிமிடத்தில் எட்டு உணவுகள் உங்கள் அம்மாவால் செய்ய முடியுமா ?
செய்யலாம் . அவள் உங்களுக்கு விதவிதமான விஷங்களை கலந்து வைத்திருந்தால் ....