சுற்றும் பயணம்
சில வாரங்களுக்கு முன்பு அலுவலகம் ஒன்றில் பணிக்காக விண்ணப்பிக்க சென்றிருந்தேன்
பாதி உணவோடும், படபடக்கும் அவசரத்தோடும் வந்த பஸ்ஸில் விறுவிறுவென ஏறி போக வேண்டிய இடத்தின் முகவரி தேடிப்பிடித்து உள்ளே நுழைந்தேன் ...நின்றிருந்த கூட்டத்தில் நானும் ஒருவளாய் நின்று கொடுத்த நுழைவுச்சீடோடு நடந்தேன்
5வது மாடியையும் அடைந்தேன் ... இருக்கையும் அங்கே இருந்தவர்களும் என்னை காத்திருக்க சொன்னார்கள் ... நிமிடங்கள் கடந்தது என்னோடு சேர்ந்து இன்னும் சிலரும் இருந்ததால் காத்திருப்பில் எந்த கடினமான கவலையும் உண்டாகவில்லை ...
சில வினாடிகள் கழிந்த நிலையில் உள்ளே அழைக்கப்பட்டேன் .. மொத்தம் மூன்று சுற்று என்று அறிவுறுத்தப்பட்டது .
முதல் சுற்று முடிந்து , இரண்டாம் சுற்றுக்கு அழைக்கப்பட்டேன் அரைமணி நேரம் கடந்த நிலையில் . இரண்டாம் சுற்றிலயே கேள்விகள் கேட்கப்பட்டு தொடர்ச்சியாக சம்பளம் , வர வேண்டிய அலுவலக நேரம் என்று எல்லாம் சொல்லப்பட்டது , பின் மூன்றாம் சுற்று எழுத்து தேர்வு இந்த அத்தனை சுற்றுகளும் ஒன்றன் பின் ஒன்றாக நடப்பதற்குள் பல மணி நேர இடைவெளிகள் எங்களை கடந்த பலமுகங்கள் என்று தொடர்ந்து கொண்டிருந்தது .
மூன்றாவது சுற்றில் தேர்வெழுதி தாளை கொடுத்தும் வந்த பதில் : u can leave for the day will cal u for the final round .
ஒரு வாரம் கடந்தது எந்த காலும் வரவில்லை சரி நாமே அவர்களை விசாரிப்போம் என்று அழைத்தபோது நீங்கள் நாளை மதியம் சரியாக 12 மணிக்கு வாருங்கள் உடன் உங்கள் அத்தனை படிப்பு சார்ந்த ஆவணங்களையும் அதன் நகல்களையும் உடன் எடுத்து வாருங்கள் என்று சொல்லப்பட்டது ... அடுத்தநாள் மீண்டும் அதே அவசரத்தோடு கிளம்பி குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களை அணுகியபோது ஆவணங்கள் சரிப்பார்க்கப்பட்டு வாங்கிகொள்ளப்பட்டு நீங்கள் நியமிக்கப்பட வேண்டிய தேதியை உங்களுக்கு கால் செய்து சொல்கிறோம் நீங்கள் இப்போதைக்கு கிளம்பலாம் என்று சொல்லப்பட்டது .
சரி என்று கிளம்பி வெளியில் வந்து வெளியேற நினைத்தபோது அந்த அலுவலகத்தின் அவசரக்கால் என்னை மீண்டும் அழைத்தது .. உள்ளே சென்று காரணம் வினவியபோது வந்த பதில் காத்திருங்கள் கடைசி சுற்று இருக்கிறது என்று .
இரண்டு மணி நேரம் கடந்தது பொறுமை இழந்து விசாரித்தபோது இன்னும் ஒரு நிமிடம் பொறுங்கள் முக்கியமான அதிகாரிக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம் வந்து விடுவார் என்றார்கள் .... பொறுமை தாளாமல் (போங்கடா நீங்களும் உங்க வேலையும் என்றே என்ன தோன்றியது )... கடைசி சுற்றும் ஒரு வழியாக முடிந்தது .. வந்த பதில் : u can leave will intimate the date , i asked i am selected or not they said intimate u thats it . இங்கே நடந்த முழுக்கதையையும் சொல்ல முடியவில்லை .என் எழுத்திலோ இல்லை என் எண்ணத்திலோ பிழை இருந்தால் மன்னியுங்கள் ... கையில் பொறுப்பு இருக்கிறது என்று அலுவலகங்களில் ஒருவருக்கு கீழ் இருப்பவர்கள் மற்றவர்களை கையாளும் விதங்களில் ஏன் இத்தனை அலட்சியம் காட்டுகிறீர்கள் .... இங்கே அத்தனை ஊழியர்களையும் , அலுவலகங்களையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை காரணம் அவர்களுக்கென்று ஒவ்வொரு செயல்முறை சட்டதிட்டங்கள் இருக்கும் ஆனால் அதற்காக அவர்கள் கையாள்கிற முறைகளை காணும்போது வார்த்தைகள் கூட மௌனமாகி போகிறது ... மனிதன் தான் உருவத்திற்கு உருவம் நிறம் மாறி கிடக்கிறான் என்றால் சில அலுவலகங்களும் சட்டதிட்டங்களும் அப்படிதான் இருக்கின்றன ...
பிடித்தோ பிடிக்காமலோ
பள்ளிக்கு சென்று ,
நின்றதை படித்து
மறந்ததை விடுத்து
உருமாறி
எடுத்த மதிப்பெண்ணோடு கல்லூரிக்கு சென்று
காதல்,கலாட்டா என்று எல்லாம் கடந்து
ஒவ்வொரு செமஸ்டரிலும்
தெரிந்ததை எழுதி
மண்டையில் ஏறாததை மறந்து
அடுத்த தேர்வில் எழுதி
பாஸானால் போதுமென்று பாஸாகி
பத்து நாட்களுக்குள்
வீட்டு சுமைப்பொறுக்காமல்
வாங்கிய பட்டதை
வழியிலுள்ள கடைகளில்லாம் நகலெடுத்து
எடுத்த நகலோடு
ஒரு விண்ணப்பத்தை புதுப்பித்து
புதுப்புது அலுவலகம் தேடி நுழைந்தால்
அலுவலக பணியிடங்கள் பாதி
சிபாரிசுகளால் நிரம்பியதுப்போக
மீதி அந்த சுற்று இந்த சுற்று என்று
உயர்தர ஆங்கிலம் பொறுத்து நிரம்பி வழிய
அதிலும் அடித்து பிடித்து தேர்வாகி நின்றால்
சொல்கிறோம் என்ற பதிலோடு குழப்பிவிடுகீறார்கள்...
இதுதான் இப்படி என்றால் ஒவ்வொரு அலுவலகத்திலும் புது புது கோட்ப்பாடு ..
வேலையே வேண்டாம் என்று இருந்திட நினைத்தால் சுயசார்பு , வீட்டுநிலை என்று பொல்லாத எண்ணங்கள் ஒரு சேர திரண்டு அடுத்தது எங்கே விண்ணபிக்கலாம் என்று தேட செய்கிறது மறுநாள் காலை செய்தித்தாளை ...