எது மாற்றியது உன்னை

எப்படி இருந்தாய்
எப்படி மாறினாய்
எது மாற்றியதுன்னை
என்றெல்லாம்
கேட்கப் போவதில்லை...

எதையும் கேட்கும்
மனநிலையில்
இப்போது நீயில்லை ....

கேள்விகளின் நியாயத்தை
உணர முடியாதவரை
பதில்களில் உண்மையிருக்காது...

சாவிகள் கையிலிருந்தாலும்
உளக் கதவுகள் திறப்பதில்லை
அறியாமை, அறிய விடாமை
பூட்டி வைத்திருக்கின்ற போது...!!!
===============================

தோழி துர்க்கா

எழுதியவர் : தோழி துர்க்கா (2-Apr-14, 3:59 pm)
சேர்த்தது : தோழி துர்க்கா
பார்வை : 246

மேலே