உனக்காகவே மட்டும்

என் இதயம் அழகானது உன்னால்
நான் எழுதிய வார்த்தைகள் அழகானது உன்னால்

மடை திறந்த வாய்கால்கள் போல்
மின்னல் வெட்டிய வெளிச்சம் போல்
அடைமழையில் புகுந்த காற்றை போல்
அனல் பரவும் காட்டில் விழுந்த தீயை போல்
தடுத்திட முடியாத வார்த்தைகள்
தத்துவம் ஏதும் மில்லாத வரிகள்
கொட்டி விட்டு செல்கிறது
கண் சிமிட்டிய நேரத்தில்

என் தூக்கத்திலும் நீயாக இருந்தாய்
என் கனவிலும் நீயாகவே வந்தாய்

என்னை நானே ரசிக்க முயன்றதும்
என்னமோ தானே வாசிக்க முயன்றதும்
அர்த்தங்கள் ஏதும் மில்ல
அத்தனையும் நீயாகவே இருப்பதால்

எழுதி விட்டு சென்ற காற்றுக்கு
ஓவியம் தெரியவில்லை
ஓவியம் வரைந்த காகிதத்துக்கு
எழுத்துக்கள் ஒன்றும் புரியவும் மில்லை
பார்வையில் ஆயிரம் தோன்றினாலும்
என் பார்வையில் நின்றவள் நீ

கண்ணில் ஆயிரம் மடைகள் திறந்தது
இதயத்தில் ஆயிரம் கண்ணாடிகள் உடைந்தது
பாதையில் நடபிணமானது
பார்த்தவர்களின் கண்களுக்கு கேலியானது
இவை உண்மை என்று அறியவைத்தாய்
எந்த கோணத்திலும் உன் முகம் ஒன்றையே பதியவைத்தாய்

முகவரி இல்லாத இடத்தில்
முகவரியை தேட வைத்தாய்
முச்சிக்கு முன்னூரு முறை
எனக்கு நீ என்று சொல்ல வைத்தாய்

தாகம் எடுத்தாலும்
தண்ணீர் வேண்டாம் என்கிறது
கோபம் இருந்தாலும்
வெட்கம் தானா சிரிக்க வைக்கிறது

உடல் நடமாடுவது உணவால்
என் உள்ளம் நடமாடுவது உன் நினைவால்

நீ தேடும் வாழ்க்கை எதுவாகவும் இருக்கலாம்
நான் தேடும் வாழ்க்கை உனக்காகவே மட்டும் இருக்கும்....,

எழுதியவர் : காந்தி (2-Apr-14, 4:06 pm)
Tanglish : unakaakave mattum
பார்வை : 833

மேலே