உண்மை காதலுக்காக

எழுது கோளாக நான் இருந்தாலும்
அது எழுதி விட்ட வார்த்தைகள்
நீ யாகவே இருக்கிறாய்

கண்களில் ஆயிரம் தோன்றினாலும்
கண்ணுக்குள் நின்றது
உன் முகமாகவே இருக்கிறது

என் மொழிகள்
பிழை என்றாலும்
உன் மௌனத்தால்
ஆயிரம் மொழிகள் கண்ணீர் வடிக்கிறது

தொட்டதும்
தொட்டு விட முயன்ற பார்வைகளும்
உன் கண் பட்டதால் என்னமோ
கைதியாகவே சிறையடைக்கப்பட்டு இருக்கிறது
என் இதயத்தில்

நான் உன்னிடத்தில்
பேசும் பொழுது
வார்த்தைகள் யில்லை
காற்றோடு கலந்த வார்த்தைகளை
நீ சுவாசிக்கும் காற்றோடு அனுப்பிவைத்துளேன்
அது உனக்கு புரியவும் மில்லை

நான் புரிந்துகொண்ட காதல்
உனக்கு புரியவில்லை
நான் புரிந்துகொண்டதை போல்
நீ புரிந்துகொள்வாய் என
உன் நிழலோடு
உனக்கு தெரியாத ஒரு பிம்பமாக
உன்னோடே வாழ்ந்து கொண்டுயிருக்கிறேன்
உண்மை காதலுக்காக

எழுதியவர் : காந்தி. (2-Apr-14, 9:20 am)
Tanglish : unmai kaathalukkaga
பார்வை : 162

மேலே