+++சில கேள்விகளும் சில பதில்களும்+++

புதியவன்: ஓட்டு போடுவது நல்லதா? ஓட்டு போடாமல் இருப்பது நல்லதா?

பழையவன்: ஓட்டு போடும் உரிமை உள்ளவர்கள் ஓட்டு போடுவது நல்லது. ஓட்டு போடும் உரிமை இல்லாதவர்கள் ஓட்டு போடாமல் இருப்பது நல்லது.
==============================================
புதியவன்: ஒருவர் சராசரியா எத்தனை ஓட்டு போடலாம்?

பழையவன்: ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேர்தலிலும் கண்டிப்பாக ஒரு ஓட்டு போடலாம்.
==============================================
புதியவன்: பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது சரியா? தவறா?

பழையவன்: அப்படி பணம் வாங்குவதே தவறு.. மீறியும் பணம் தினிக்கப்படுமானால், கண்டிப்பாக தரும் கட்சிக்கு ஓட்டு போட வேண்டாம்..எல்லா கட்சியுமே அப்படி நடந்துகொண்டால், எல்லாத்தையும் வாங்கிக்கொண்டு ஏதேனும் ஒரு சுயேட்சைக்கோ இல்லை 49 ஓ விற்கோ ஓட்டு போடலாம்.
==============================================
புதியவன்: நாம ஓட்டு போடறதாலே நமக்கு ஏதாவது நன்மை ஏற்படுமா?

பழையவன்: பலன எதிர்பார்த்தோம்னா எதுனாலேயும் நன்மை இல்லை... நம்ம நாட்டுக்கு நாம உண்மையா இருக்கறோம்னு தோணுச்சுன்னா நாம எதுவும் எதிர்பார்க்காம் ஓட்டு போடணும்.. ஏனா எதிர்பார்த்தாலும் எதுவும் கிடைக்கப்போறதில்லை
==============================================
புதியவன்: ஓட்டு போடும் போது சாதி, மதம் பார்க்க வேண்டுமா?

பழையவன்: நாம வாழ்க்கை முழுவதும்தான் அதப் பார்க்கறோமே.. அந்த ஓட்டு போடும் ஒரு நொடிக்கு மட்டும் அத மறந்துட்டு ஓட்டு போட்டா ரொம்ப நல்லது.
==============================================

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (20-Apr-14, 10:42 pm)
பார்வை : 299

மேலே