மன்மதனே எனைக் களவாடு

மீட்டிய வீணையில் இருந்து
விரல் எடுத்தபின்பும்
இசை வழிவது மாதிரி
என் நினைவுக் குழிகளுக்குள்
உறங்கிக்கிடகிறது , உன் ஞாபக
கோலிக்குண்டுகள்...
சொட்டுச் சொட்டாய்
ஒழுகும் நீர்த்துளி மாதிரி
உன் காதல் மெழுகை
என் இதயபாத்திரம்
இருக்கிக்கொண்டது..
ஈரத்துணி போர்த்திய
கோழிக்குஞ்சு மாதிரி
சப்தமின்றி கிடக்கிறது
என் காதல் சமிக்ஞ்ய்கள் ...
மாங்காய் களவாடும்
சிறுவர்கள் மாதிரி
தோட்டக்காரன் நீ, அறியாமலேயே
உன் காதலை பறித்துக்கொண்டது
என் விழிகள்...
காதல் மொழி பரிமாறியும்
புரியாதவனாய் இருக்கிறாய் !
இதயத்தின் ஒரு பகுதி துடிப்பதெப்போ!
மன்மதனே ! எனைக் களவாடிப்போ !