+++என்றுமே பிஷ்ஷா கார்னர்+++
அவள் சப்தமிட நானும்
சப்தமிட சண்டையென்று
ஊர் பார்த்தது குறும்பு
காதல் சண்டை நடுரோட்டில்
====++++====+++===
விட்டுகொடுப்பால்
திட்டிடுவாள் அழுகை அவளுக்கு
சொந்தம் திகைப்பில்
அப்பாவி காதலன்
====++++====++++===
படீர் என்று பட்டாசு சப்தம்
வீதியோரத்தில் என்னவோ
என்று பார்த்தேன் வீதியிலே
என் காதலியின் சிரிப்பு
====++++====++++===
இரண்டு சக்கர வாகனம்
நானும் ஒரு வாகன
ஓட்டி என் காதலிக்கு
என்றுமே பிஷ்ஷா கார்னர்
====++++====++++===
என்னை கொஞ்சினால்
புகழ்ந்தால் சந்தேகப்பட்டேன்
தற்போது எனது
மணிபர்சில் 1 ரூபாய்
====++++====++++===

