நகைச்சுவை 115
கணவன் மனைவி ஒரு ஹோட்டலின் ஏழாவது தளத்தில் தங்கி இருந்தனர். இரவு ஒரு மணிக்கு ஹோட்டல் மேனேஜரை இண்டர்காமில் அழைத்து, "மேனேஜர் .. நீங்கள் உடனே என் அறைக்கு வரவேண்டும். எனக்கும் என் மனைவிக்கும் பெரும் வாக்குவாதம் முற்றிவிட்டது .. என் மனைவி உங்கள் ஹோட்டலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுகிறாள்" என்று சொல்லவும் மேனேஜர், "சார் .. இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை. இதில் நான் தலையிடுவது சரியல்ல" என்றார். அதற்கு அந்த நபர், மேனேஜர் உங்கள் ஹோட்டலின் ஜன்னல் கதவுகளை திறக்க முடிவதில்லை. இது ஹோட்டல் பராமரிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை. நீங்கள் உடனே வாருங்கள்" என்று பதிலளித்தார்.