கொலம்பஸிற்கு முன்பே அல்பிரூனி அமெரிக்காவை கண்டுபிடித்தார்

வாஷிங்டன்: ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த மாலுமியும், தேடலாய்வாளருமான கிறிஸ்டோபர் கொலம்பஸிற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே பிரபல கணித மேதையும், விஞ்ஞானியுமான அல்பிரூனி அமெரிக்காவை கண்டுபிடித்துள்ளார் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹிஸ்டரி டுடே பத்திரிகையில் பிரபல அமெரிக்க ராஜீய வல்லுநரும் வரலாற்று ஆய்வாளருமான ஃபெடரிக் இதுக்குறித்து ஆய்வை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க பூகண்டங்களைக் குறித்து வெளியுலகிற்கு முதன் முதலாக அறிவித்ததாக அதிகாரப்பூர்வ வரலாற்றைக் கூறும் கொலம்பஸ் கி.பி.1498-ஆம் ஆண்டு தான் அங்கு சென்றுள்ளார். ஆனால், அதற்கு முன்பு கி.பி 1000ஆம் ஆண்டில் அமெரிக்காவை குறித்து அல்பிரூபின் குறிப்பை தெரிவித்துள்ளார்.


கி.பி 973-ஆம் ஆண்டு தற்போதைய உஸ்பெகிஸ்தானில் அபூரைஹான் முஹம்மது இப்னு அஹ்மத் என்ற அல்பிரூனி பிறந்தார்.அல்பிரூனி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து நூல்களை எழுதியுள்ளார். இந்தியாவின் கேரள மாநிலத்தில் பல மாதங்கள் தங்கியிருந்த அல் பிரூனி தாரிக்குல் ஹிந்த்(இந்தியாவின் வரலாறு) என்று நூலை எழுதினார். தொடர்ந்து உலக பயணங்களை மேற்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்ட அல்பிரூனி இத்தகைய பயணத்தில் தான் ஆசியா,ஐரோப்பாவை தவிர உலகில் இன்னொரு பெரிய கண்டம் இருப்பதை தெரிந்துகொண்டார்.


ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் மேற்கு கடற்கரை முதல் ஆசியாவின் கிழக்கு கடற்கரை வரையிலான பிரதேசம் பூமியின் ஐந்தில் இரண்டு பகுதி மட்டுமே வரும் என்று அல் பிரூனி கணித்தார். பூமி உருண்டது என்று பிதாகரஸைப் போலவே அல்பிரூனியும் நம்பினார். இதுக்குறித்து அவருடைய காலத்தைச் சார்ந்த பூகோள விஞ்ஞானி அஹ்மத் அல்ஃபர்கானுடன் நடத்திய விவாதங்களை தொடர்ந்து பல்வேறு பூ கண்டங்களிடையேயான தூரத்தைக்குறித்து அல்பிரூனி கணித்தார். அவர் தனது நூலில் அமெரிக்காவைக் குறித்த தனது கணிப்பின் விபரத்தையும் வெளியிட்டுள்ளார்.


அமெரிக்காவை கண்டுபிடிக்கும் நோக்கில் கொலம்பஸ் பயணிக்கவில்லை. ஐரோப்பாவில் இருந்து ஆசியாவிற்கு செல்லும் வழியில் அவர் அங்கு சென்றடைந்தார். எனினும் அவர் இந்தியா என்று புரிந்துகொண்டார். அமெரிக்கா என்ற பெரியதொரு பிரதேசம் மேற்கு ஐரோப்பிய கடற்கரைக்கு அப்பால் இருக்கிறது என்பதை கொலம்பஸ் புரிந்துகொள்ளவில்லை என்று ஃபெடரிக் தெரிவித்துள்ளார்.

எழுதியவர் : லெத்தீப் (3-May-14, 10:12 am)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 70

மேலே