வெளிச்சம் 3

உண்மையான வரிகள் . எத்தனையோ மெய் ஞானிகள் இதைப்பற்றி பல்வேறு விதமாக விளக்கி இருக்கிரார்கள்.எதைப்பற்றி என்று கேள்வி எழுகிறதா ?
நான் விளக்க இருப்பதும் அந்த வரிகளைப்பற்றிதான்.
" அறிவே தெய்வம்
உடலே கோவில் "
ஆம் . அறிவை பெருக்கிக்கொல்வதும் உடலை பேணிக்காத்தலும் தான் நம் முக்கிய கடமை.
அதை விடுத்து கோவிலாகவும் தெய்வமாகவும்
பாவித்து எத்தனையோ சடங்குகளும் சம்பிரதாயங்களும் அதுகூட இருக்கட்டும் இது போன்ற மதங்களால் சிலருக்கு மதம் பிடித்து விடுகிறது . மதம் பொதுவாக யாருக்கு பிடிக்கும் யானை போன்ற விலங்குக்கு அல்லவா பிடிக்க வேண்டும்.மனிதனுக்கு அல்லவே !
இன்னும் மதம் பிடித்த மனிதர்கள்
இருக்கவே செய்கிறார்கள்.
மெய் ஞானிகள் விளக்குவதென்ன ?
உடல் பஞ்ச பூதத்தால் ஆனது .
உடல் இயற்கையோடு இணைந்த
ஒரு அமைப்பு . இந்த உடலை பாதுகாத்தல் ,பேணிகாத்தல் கோடிபுண்ணியம் .
இந்த வாழ்வின் நோக்கமே இந்த உடல் பெற்ற பண்பை அடுத்த சந்ததிக்கு எடுத்துச்செல்வதுதான்
இதற்க்கான வாழ்க்கை போராட்டத்தில்தான் நாம்
அல்லாடித்திரிகிறோம். ஆக நாம் பெற்ற இந்த உடலை குறைபாடுகளின்றி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் . இதற்க்கு அறிவை நாட வேண்டும் . அறிவே தெய்வம் .இந்த்த உலகத்தில் வாழ்வதற்கான அத்தனை தகுதிகளையும் திறமைகளையும் நாம் பெற்றிருக்கிறோம் . காரணம் இயற்கையில் நாமும் ஒரு சக்தி. பலகோடி ஆண்டுகள் தாண்டி பயணித்த பஞ்சபூத சக்தி நம் உடல் .
இந்த உடல் நமது அரிவாள் ஆழப்படுகிறது.
ஆக நம் அறிவின் வேலையை பூர்த்தி செய்யத்தான் இந்த உடல் தோற்றம் அமைந்துள்ளது. அறிவின் தேவைகள் உடலால்
பூர்த்தி செய்யப்படுகிறது. அறிவின் நோக்கமும்
அடுத்த சந்ததிக்கு ஆரோக்கிய பயணம்.
தொடரும்....