மனிதன் குரங்கான கதை

ஒரு மணவன் ஆசிரியரிடம் "குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்றால் இன்றைய குரங்குகள் ஏன் மனிதனாகவில்லை?" என்று கேட்டான். அதைக்கேட்ட ஆசிரியர் சிறித்துக் கொண்டே சொன்னார் .
"குரங்குகள் எப்போதும் கூட்டமாக வாழும் குணம் கொண்டவை .தங்களின் திறமையை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் மரம் விட்டு மரம் தாவும்போது தவறி கீழே விழுந்த குரங்குகளை மீன்டும் தங்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்வதில்லை . அவ்வாறு ஒதுக்கப்பட்ட குரங்குகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து தனிக் கூட்டமானது. தங்களை ஒதுக்கிய குரங்குகளிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்ள இரண்டுகாலில் நடப்பது, பேசுவது, போன்ற குணங்களுடன் போட்டி, பொறாமை போன்ற மனித குணங்களை வளர்த்துக்கொண்டு மனிதனாகின . இன்றைய மனிதனின் போட்டி, பொறாமை, சாதி, மதம், பணம் போன்ற குணங்களைப் பார்த்த குரங்குகள் 'இனி மனிதராக வேண்டாமென' திருந்தி விட்டன போல என்றார்"

கருத்து: குரங்கால் வெறுத்து ஒதுக்கப்பட்டவன் மனிதன் என்றாலும் குரங்கிலும் மோசமானது மனித மனமும், மனதின் குணமும்.

எழுதியவர் : (11-May-14, 12:09 pm)
பார்வை : 337

மேலே