நாடக மேடை உலகம்

நாடக மேடைதான் இந்த உலகம்
நாமும் நடிக்கிறோம் ஒரு கதாபாத்திரம்

நம்ப வைப்பது ஒருவனின் வேலை
ஏமாற்றுவது பலரின் லீலை

பெத்தவனுக்கு பிள்ள மேல பாசம்
சொத்த அடிக்க இவன் போடும் வேஷம்

உடன் பிறந்தவன சாய்க்க வரும் நினைப்பு
துரோகம் செய்வது இவன் பொழப்பு

காசு இருந்தா காக்கா கூட வெள்ளை
நரம்பில்லா நாக்கு நமக்கு தொல்லை

உறவெல்லாம் பணம் கண்டு மாறும்
பாசம் கூட செல்லரித்து போகும்

வேஷம் போடும் பொய்யான வாழ்க்கை
மோசம் செய்ய எண்ணுது மனம் திண்ணம்

நிலைமைக்கு தகுந்தாற்போல் நடிப்பு
நடித்து முடிப்போம் இது தான் சிறப்பு

கூத்துக்கு வேஷம் போடும் கூட்டம்
உலகில் நாம் போடும் ஆட்டம்

பிறக்கும் போது நீ ஏழையாக இல்லை
இறக்கும் போதும் நீ பணக்காரன் இல்லை

உலகம் ஒரு நாடக மேடை -இதில்
உண்மையான கதாபாத்திரம் வேணும் !

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் (24-May-14, 4:27 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 212

மேலே