பை இல்லா சட்டை
![](https://eluthu.com/images/loading.gif)
சாலையோர பயணங்களில் தென்பட்டன...
கண்ணாடி பெட்டிக்குள் அலங்கரிக்க பட்ட உணவுகள்..
மெல்ல என்னை அழைத்தது
சாப்பிடுவோரின் வாயில்
நுழையவிருக்கும் உணவுகள்....!!!
பயணம் செய்வோரை வரவேற்று அமர்ந்திருந்தது வண்ண நிற பலகைகள்....!!!
நாக்கில் எச்சில் ஊரும் தன்மையில்
மூக்கினுள் நுழைந்தது
உணவு பொருள்களின் வாசனை...!!!
சிற்றுண்டிக்குள் அனுமதி பெற்றது எனது பார்வைகள் மட்டுமே ....
பாதங்கள் அல்ல ...!!!!