சில்லறை நியாயங்கள்

அன்றோ
கொசுறு கொடுத்து
விற்பனை செய்தவர்
இன்றோ
கொசுரையும் நோட்டாக்கும்
கோக்குமாக்கு வித்தையாக
சில சாம்பூக்களும்
சில சாக்லேட்டுகளும்
சில பருப்பிகளும்
சில காலங்களாக
சில்லறைக்கு
மாறாக
கொடுக்கப்படும்
ஆனால்
ஏற்கப்படாத
பின்னணியின்
பின்னால்
மெல்லச்
சிதறுகின்றன
சில்லறை நியாயங்கள்