புருஷ லட்சணம்
என்
தேடலின்
திசை அறிந்தவனே...
தேவை என்னும் போது
அள்ளித் தருவாய் ..
வேண்டாம் என்றால்
விலகியே நிற்பாய் ...
என் மீது தான்
எத்தனை ப்ரியம் உனக்கு ..
மனைவியை காதலிப்பதை
மறக்காமல் இருப்பவன் நீதான் ...
ஏட்டோடு இல்லாமல்
வீட்டோடும்
விருத்தி செய்தவன் நீதான் ..
உன் ப்ரியம்
நான் பிறந்த பயனடைந்தேன் ..
எல்லோருக்கும் வாய்க்குமா
இந்த வாழ்க்கை ..
கண்ணீரே இல்லாத
என் கண்கள்
நீ தந்த கருணை ...
புன்னகையே பூக்கும்
என் இதழ்
உன் கொடை...
நிழலாய் நீ இருக்கிறாய்
ஆனால் நிஜம் ..
உத்தியோகம் புருஷ லட்சணம் ..
உனக்கு
மனைவியானது என் பாக்கியம் ..!!

