அப்பாவும் மகளும்

>$..தந்தையின் மனம்..$<

எதிர் வீட்டுப்பையனின்
காதலை ஏற்க மறுத்தபோது,
என் மானத்தைக் காப்பற்றியதாய்
எண்ணிய நான்....
இப்போது வருந்துகிறேன்,,
வரதட்சணை தர முடியாமல்
முப்பத்தைந்து வயதாகியும்
முதிர்கன்னியாய் இருக்கும்
என் மகளைப் பார்த்து.....!!!
அன்றே அவனை நீ
பதிவுத் திருமணம் செய்திருக்கலாமே என்று...


>$..மகளின் மனம்..$<

முப்பத்தைந்து வயதாகியும்
முதிர்கன்னியாய் இருப்பதில்
வருத்தம் ஒன்றுமில்லை அப்பா...!
உங்கள் மரியாதையை காத்த
பெருமையொன்றே போதும் எனக்கு....!

எழுதியவர் : தென்றல் தாரகை (5-Jun-14, 1:43 pm)
Tanglish : muthirkanni
பார்வை : 3716

மேலே