மஹாபாரதத்தை நேசிக்கிறேன் -3

ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய:

பாஞ்சாலி சபதம் – பாரதி
***************************************
கண்ணபிரா னருளால் - தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்
வண்ணப்பொற் சேலைகளாம் - அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே! – பாரதி (பாஞ்சாலி சபதம்)

திரௌபதி – பிருத்வீ – பூமியும், பூமியை சுற்றிய பகுதிகளும்.(உயிர் சக்தி)
பாண்டவர் - ஐம்புலன்கள் (ஐம்பொறிகள்)
துரியோதனன் - காமம் - அதீத ஆசை, புணர்ச்சி விருப்பம்.
துச்சாதனன் - மதம் - அதீத வேட்கை, செறுக்கு, வெறி.

இயற்கையே வடிவான திரௌபதியை, காமமே உருவான துரியனின் ஆணைக்கிணங்க மதத்தின் மறுத்தோற்றமான துச்சாதனன் ரகசியமறிய துகிலுரிய, காக்க வேண்டிய தர்மம் கீழிறங்க, காலசக்கரச் சுழற்சியில் அதர்மம் மேலோங்க, மண்ணாசையால் நிலைகுலைந்து தலைகுனிய முற்பட, இயற்கை இறையை இறைஞ்சுகிறது. இயற்கையே இயல்பான இறையால் இரட்சிக்கப்படுகிறது. ஆர்வம் அதிகரிக்க ஆசையாக, ஆசை அதிகரிக்க வேட்கையாக, வேட்கை அதிகரிக்க வெறியின் வேட்டையாக மீண்டும் மீண்டும் துகிலுரித்தாலும் உன்னை அவர்களால் கண்டுணரவே முடியாது. உனது ரகசியங்கள் எத்தனை யுகமானாலும் விளங்காததாகவே இருக்கும். மாறாக உன்னை பாழ்படுத்த எத்தனித்தால் சங்கடங்கள் உனக்கில்லை அவை என்றும் அவர்களுக்கே. இது இயற்கையின் மறுபெயரான திரௌபதிக்கு இறையளித்த சத்தியம். ஆக, இன்று வரை விஞ்ஞானம் எவ்வளது வளர்ச்சியடைந்தாலும் பூமியின் (பிருத்வீ) ரகசியம் அறியப்படாமலே உள்ளது.

எழுதியவர் : ரமணபாரதி (6-Jun-14, 11:38 pm)
பார்வை : 160

சிறந்த கட்டுரைகள்

மேலே