ரமண பாரதி - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/a/fjiya_4732.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ரமண பாரதி |
இடம் | : திகட்டாத திண்டுக்கல் |
பிறந்த தேதி | : 16-Dec-1973 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 380 |
புள்ளி | : 85 |
இவன் காதலால் வென்றவன்... ஆனால், காதலில் தோற்றவன்...
வளர் இளம் திங்கள் கன்னி...
இளமை மீதூர இன்பத்தை எண்ணி...
உளமகிழ் சிறப்பில் வேட்கை...
அளவிலா மரபில் வாழ்க்கை...
கொய்த பாவம் நன்று தொடுக்க...
செய்த தவம் நின்று தடுக்க...
எனக்கென வாழ்க்கை பொருத்தம் பார்த்து-
கணக்கென வந்தவையில் பொருந்திப் போனேன்...
கனவு சுகம்... கலவு சுகம்...
காலமது வசப்படுவதாய்-
கண்விழித்தே கனவு காண்பதும் சுகம்...
நிற்க,
பொருத்தம் பார்ப்பதை விட-
பொருந்தி போதல் சுகமட்டுமல்ல...
நிஜம், நிதர்சனம்.
பிடிக்காத படிப்பு...
முடிக்காத பட்டயம்...
நிறைவேறாத காதல்...
விரும்பாத வேலை...
போறாத ஊதியம்...
பொய்யர்களிடையே விவாதம்...
துரோகிகள் மத்தியில் இருப்பு...
துணையில்லாத இரவு...
இருந்தும் வாழ்க்கை-
சுவாரஸ்யமாகத் தானிருக்கிறது..
உனது மறுதலிப்பில்,
எனது அவதானிப்பாய்...
காதல் கருகி,
கவிதை மலர்ந்த பொழுது,
புரிந்தது...
இவன்-
இருளைப் பற்றி,
கவலைப்படாத,
குருடனென்று...
பத்தாவது தேறி,
பத்தோடொன்று பதினொன்றாகி...
பத்தாம் பசலியல்ல,
என நிரூபித்து...
பன்னிரெண்டில் தோற்று,
ஒட்டுமொத்த கல்விகூடங்களை,
சாடிவிட்டு...
வயது அடிப்படையில்,
பட்டம் பெற...
விண்ணப்பம் வாங்க...
வரிசையில்,
நின்ற பொழுதே
கவிதை எழுதினேன்...
ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய:
ஆராதிப்பவர்களின் சாரதி...
**************************************
பகவான் கிருஷ்ணனை படைத்துணையாக அழைக்க,
துரியோதனன் மற்றும் அர்ச்சுனன் துவாரகை சென்று
துயில் கொண்டிருக்கும் பகவானின் தலைப்புறத்தில் உள்ள ஆசனத்தில் துரியனும், கால்புறத்தில் அஞ்சலிக்கும் விதமாக பார்த்தனும் அமர்ந்திருக்க, அரிதுயில் நீங்கப்பெற்றவராக கண்ணன் கண்விழிக்க முதலில் பல்குனன் பக்கம் பார்க்கிறார். பிறகே, துரியனைக் கண்ணுற்றார், வந்தக்காரணம் வினவினார்.
துரியன்: போர் மூளும் பட்சத்தில் தனக்கு படைத்துணையாக வருமாறு கேட்டுக்கொண்டான்.
விஜயனும் தனக்கு படைத்துணையாக வருமாறு விண்ணப்பித்தான்.
பகவான்
ராவணன் ஒரு தமிழன்.... வீணை கொடியோன்.....
அந்த மறத்தமிழனை சில காவியங்கள் தவறானவனாக கூறுகிறார்கள்..... அதை பற்றி உங்கள் கருத்து என்ன ? என் நண்பன் ராவண மன்னன் பற்றி பெருமையாக சில வரலாற்று நிகழ்வுகளுடன் கூறுகிறான்..... உங்கள் கருத்து படி ராவணன் என்பவன் நல்லவனா? தமிழர் பெருமை அடையும் அளவுக்கு சிறந்தவனா? அல்லது தவறானவனா ? கருத்துகளை பகிரவும் .... என்றும் அன்புடன்
உங்கள் கவி
ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய:
காதல் நதி (அப்சரஸ்)
*********************************
அப்சரஸ் என்பவள் யார்? அவளொரு ஜலகன்னிகை, பேரழகி, தேவர்களுடன் வசிக்கும் அவள், எப்பொழுதேனும் புவிக்கு வந்து செல்வாள், அவள் வரும்பொழுது மரம் செடி கொடிகள் மட்டுமல்லாது எல்லாவகையான விலங்குகள்கூட அவளை ஒருமுறையேனும் தொட்டுவிட விழையும் என்று மஹாபாரதத்தில் ஊர்வசி என்கிற தேவகன்னிகையானவள் வர்ணிக்கப்படுகிறாள்.
சந்திரனுக்கும் தாரைக்கும் பிறந்தவன் புதன், புதனுக்கும் இலாவுக்கும் பிறந்தவன் புரூரவன். இவன் ஒருமுறை தனது தேசத்திற்குட்பட்ட நதியில் குளித்து கொண்டிருந்த அப்சரஸ் ஊர்வசியை கண்டு காதலுற்றான், தன்னை திருமணம் செய்துகொண்டு
ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய:
பாஞ்சாலி சபதம் – பாரதி
***************************************
கண்ணபிரா னருளால் - தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்
வண்ணப்பொற் சேலைகளாம் - அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே! – பாரதி (பாஞ்சாலி சபதம்)
திரௌபதி – பிருத்வீ – பூமியும், பூமியை சுற்றிய பகுதிகளும்.(உயிர் சக்தி)
பாண்டவர் - ஐம்புலன்கள் (ஐம்பொறிகள்)
துரியோதனன் - காமம் - அதீத ஆசை, புணர்ச்சி விருப்பம்.
துச்சாதனன் - மதம் - அதீத வேட்கை, செறுக்கு, வெறி.
இயற்கையே வடிவான திரௌபதியை, காமமே உருவான துரியனின் ஆணைக்கிணங்க மதத்தின் மறுத்தோற்றமான துச்சாதனன் ரகசியமறிய துகிலுரிய, காக்க வேண்டிய தர்மம் கீழிறங
ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய:
புலன் வேட்டை…
***************************
கடந்தகாலத்தை எதிர்காலமாகவும், எதிர்காலத்தை கடந்தகாலமாகவும் வாழ்ந்து, தனது தந்தை(ஆயுவின் மகன் யயாதி) பெற்ற சாபத்தை தான் ஏற்று அதை வரமாக மாற்றியமைத்து, முரணான நிகழ்காலத்தில் யவன உள்ளத்துடனும் விருத்த உடலுடனும், தனது தாயை(அசுரகுல அரசன் விருஷபர்வாவின் மகள் சர்மிஷ்டை)விட மூத்தவனாகவும், தமது வாழ்வில் முன்பின்னாக மாறிவிட்ட பருவங்களால் எழும் எண்ணங்களை ஆராய்வதற்கான மனோபலத்துடன் தனிமையின் துணைக்கொண்டு, நேர்ந்த எல்லாவற்றையும் எதிர்கொண்டு, அனைத்தையும் முழுமையாக ஏற்றுக்கொண்டவன். ஒருவகையில் தாத்தா முறையுடைய பிருகு முனிவரின் மகன் அசுரக