வாழ்க்கை அழகானது

பிடிக்காத படிப்பு...
முடிக்காத பட்டயம்...
நிறைவேறாத காதல்...
விரும்பாத வேலை...
போறாத ஊதியம்...
பொய்யர்களிடையே விவாதம்...
துரோகிகள் மத்தியில் இருப்பு...
துணையில்லாத இரவு...
இருந்தும் வாழ்க்கை-
சுவாரஸ்யமாகத் தானிருக்கிறது..