எங்கே எனது கவிதை

எங்கே எனது கவிதை????
========================
எங்கே தேடுவேன்
எழுதிய கவிதையை பட்டியலில்
எங்கே தேடுவேன்??
மென் பொருள் கோளாறில்
சிக்கிக் கொண்டாயோ
வன்பொருள் கோளாறில்
இடம் மாறி விட்டாயோ?
எங்கே தேடுவேன்??
எழுதிய கவிதையை
எங்கே தேடுவேன்??
"வாசிப்பை நேசிப்போம்"
கவிதை தொலைந்தது
தளம் கண்டு சேர்த்ததும்
"புரியாத பயணம்" காணாமல் போனது
எங்கே தேடுவேன்??
எழுதிய கவிதையை
எங்கே தேடுவேன்??
புகார் சொன்னதும்
கவிதை கிடைத்தது
கிடைத்த கவிதைக்கு
வேறொன்று பலியாகுது
எங்கே தேடுவேன்??
எழுதிய கவிதையை
எங்கே தேடுவேன்??
நகைச்சுவையோடு கலந்துவிட்டாயோ
கதைப் பட்டியலில் சேர்ந்துவிட்டாயோ
எவரும் வந்து இடம் மாற்றி விட்டாரோ??
கால் நடந்து கவிதையோடிபோனதோ??
எங்கே தேடுவேன்??
எழுதிய கவிதையை
எங்கே தேடுவேன்??
இங்கே நடப்பது ஒன்றும் புரியவில்லை
வினவியபோதும் விடை கிடைக்கவில்லை
அனைவர்க்கும் இது நேருமென்றால்
கவிதை படைத்திட ஆர்வம் குறையும் நிலை
எங்கே தேடுவேன்??
எழுதிய கவிதையை
எங்கே தேடுவேன்??
பட்டியலை விட்டு நீங்கிய கவிதை
மீண்டும் வந்தே சேர்ந்திடுமா??
கேள்வியோடே முடிக்கின்றேனே
விடை கிடைத்தாலே மகிழ்ந்திடுவேனே!!!
எங்கே தேடுவேன்??
எழுதிய கவிதையை பட்டியலில்
எங்கே தேடுவேன்??