பாதுகாப்புக்கவசம்

நான் கொண்ட அழகு
கொண்டவனுக்கே.......
கண்டவனுக்கும்
கடை போட
நான் தயாரில்லை....
கண்ணாலே கற்பழிக்கும்
காமுக மிருகங்களிடமிருந்து
என்னை பாதுகாக்கும்
என் கண்ணிய ஆடை....
ஆடைகள் அணிந்த போதும்
ஆங்காங்கே தெரியும் அங்கங்களை
பார்வையால் திருடும் பாவிகளுக்கு
நான் போட்டேன் இரும்புத் திரை....
இறுக்க உடைகளில்
அவயங்களை அளவிட்டுக் காட்ட
காட்சிப் பொருளல்ல நான்....
குனிதல் நிமிர்தலில்
மேயும் சபலைகளுக்கு
மேய்ச்சல் நிலமாகாமல்
பாதுகாப்பை உறுதி செய்தேன் பர்தாவினால்.....
மெல்லிய உடைகளில்
அங்கக் கமுக்கங்களை
அம்பலப்படுத்தும் அசிங்கத்தை விட்டும்
அபயம் தேடிவிட்டேன் அபயாவிடம்....
உணர்ச்சியை தூண்டி பாவியாகாமல்
எவரையும் நான் பாவியாக்காமல்
கண்ணியம் காத்து விட்டேன்
பெண்ணியம் போற்றி விட்டேன்.....