எதை நோக்கி செல்கிறோம்
இயற்க்கைக்கு புலன் இல்லை ,
சரி இல்லை தவறு இல்லை ,
கட்டுப்பாடு இல்லை ,
ஆனால் இயற்கையால் படைக்கப்பட்ட மனிதன்
இது சரி இது தவறு என்று பிரித்து கட்டுப்பாடுகள் விதித்து இதுதான் வாழ்க்கை என்று கூறினான்.
கட்டுப்பாடுகள் அமைத்தவன் மனிதனின் அடிப்படை குணங்களை நன்கு உணர்ந்து விதித்தான ? இல்லை.பெண்களை பொத்தி பொத்தி வைக்கவேண்டும்.பெண்களை அடக்கவேண்டும் என்ற ஆண் ஆதிக்க எண்ணங்களின் அடிப்படையில் மட்டும் கட்டுப்பாடுகள் விதித்தால் நன்கு கற்று , நல்ல சூழ்நிலையில் அன்பு பாசம் என்னும் மனித உணர்வுகளை உணர்ந்தவன் கலாச்சார கட்டுப்பாடுகளை பின்பற்றினான் .இன்றைய இயல்பு வாழ்க்கை பணம் இருப்பவர்களுக்கு வாழ்க்கை சொர்கமாக பணம் இல்லாதவர்களுக்கு நரகமாக இருகின்றத்து. சரியான கல்வி இல்லை, அன்பு பாசத்தை உணர்த்த உறவில்லை.மனிதன் எப்படி கட்டுக்குள் வருவான்.
உளவியல் மருத்துவர்கள், ஒரு குழந்தை சிறு வயதில் இருந்தே தாய் யார் என்று தெரியாமல் வளர்ந்தால் அது தாயின் குணம் உணராது என்கிறார்கள்.டென்மார்க்கில் தத்தெடுப்பது அதிகம்.
ஆப்ரிக்க நாட்டு குழந்தைகளை பலபேர் தத்தெடுத்து வளர்கின்றனர்.அதில் ஒருத்தர் என்னுடன் பணி புரிபவரின் தங்கையின் குழந்தை.அக்குழந்தை அனாதை விடுதியில் வளர்ந்ததுனால் அடிப்படை அன்பு பாசம் இல்லாமல் மிகவும் முரட்டுத்தனமாகவும் , மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட பிடிக்காமலும் 2 வருடங்கள் அவர்கள் குடும்பத்துக்குள் ஒருத்தியாக நினைக்க முடியாமல் சிரமப்பட்டதை கூறினார்.பின்னு இவர்கள் அவள்போகிலே போய் கொஞ்சம் கொஞ்சமாக முத்தமிடுவது அனைத்துகொல்வது என்று அவளும் சகஜமாய் அனைவருடன் இயல்பாக பழக உதவி செய்தனராம். ஒரு செயலில்
வீரியம் ஒருவன் மனநிலை நிர்ணயக்கின்றது.
ஒருமுறை அல்ல *கற்பழிப்பு நாடு* என்று பேர் போகும் அளவிற்கு இந்திய மாறி வருகிறது என்றால் அடிப்படை கரணம் என்னவென்று சிந்திக்கும் சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்.
இன்று இவர்களை தண்டிப்பதால் கண்டிப்பாக இந்த தவறு திரும்பவும் நடக்காது என்று நாம் நினைக்கலாம்.அனால் அது இன்றைக்கு நடந்த தவறுக்கான நீதியாக இருக்குமே தவிர , தீர்வாக அமையவே அமையாது.தண்டனைகள் தீவிரம் ஆக்குவதால் பயத்தை உருவாக்கலாம்.
வெறிபிடித்த மனம் பயம் அறியாது.
ஆங்கிலம் பேசுவதை பெருமையாக நினைகின்றோம்.ஆங்கிலேயர்களுக்கு வேலை பார்ப்பது பாக்யமாக நினைகின்றோம்.வெளி நாட்டில் வாங்கும் பொருட்கள் தரமாக இருக்கும் என நம்புகிறோம் ஆனால் வாழ்க்கை பற்றிய அவர்களுக்கு இருக்கும் கண்ணோட்டத்தை நாம் ஏற்றுகொள்ள மறுக்கிறோம்.இதுதான் மனிதன் இயல்பு இதுதான் அவனுக்கு தேவை என்று ஆங்கிலேயர்கள் நினைத்ததினால் இன்று அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது.
கலாச்சாரம் கலாச்சாரம் என்று கூறிக்கொண்டு நான் வாழ்ந்தால் போதும் எனக்கு தேவையானது கிடைக்கின்றது என்று நினைக்கும் மனிதர்கள் நம் நாட்டில் இருக்கும்வரை சமூக சீர்கேடுகள் நடந்துகொண்டேதான் இருக்கும்.இன்னும் எத்தனை கொள்ளை கற்பழிப்பு கௌரவ கொலை (நம்மால் மட்டும் தான் இப்டி வினோத எண்ணங்களை நம்முள் உயிரெடுக்க வைக்கமுடியும்) நடக்கப்போகிறதோ..ஒவ்வொரு தவறுக்கும் நம் குருட்டுத்தனமான நம்பிக்கைகளும், சுயநலமும் தான் காரணம் . எப்பொழுது அம்மைவை பாப்போம் எப்பொழுது தோழிகளை சந்திப்பேன் பேசாமல் இந்தியாவிற்கே சென்று விடலாம் என்று நினைக்கையில் அங்கு நடந்துவரும் கொடுமைகளும், அங்கு சென்றால் நானும் சுயநலமாகவேண்டி இருக்குமே,குழந்தை பிட்ச்சை காரர்களை கடந்துசென்று ஹோட்டல்களில் சாப்பிட வேண்டி இருக்கும் என்று நினைக்கையில் , இங்கு யாரும் துணைக்கு இல்லை என்றாலும் பாதுகாப்பாகவும், மனதிற்கு சரி என்பதை செய்துவிட்டு , உண்மையாகவும், அனைவரும் சமம் என்று நினைக்கும் மனிதர்களுடன் வாழ்வது பெருமையாக இருக்கிறது . இனிவரும் உயிர்களுக்காவது இந்தியா ஒரு சொர்கமாக அமைய நாம் சிந்திப்போம், பின் செயல்படுவோம்.