விடுதலை
விடுதலை
வெள்ளக்காரேகுதிரையிலே வெரட்டப்போனேன் மதுரையிலே நல்ல நல்ல தொரைகளெல்லாம் லொள்ளுப்பட்டு ஓடுராங்க கோட்டையத்தான் பிடுச்சுப்பிட்டேன் கொடியக்கூட நட்டுப்புட்டேன் நெட்டையான மரத்துமேலே பட்டைமூணு பரக்குதம்மா வட்டமான சக்கரம்தான் நட்டநடுவில் இருக்குதம்மா முட்டவந்த மாடுகெல்லாம் எட்டநின்னு பாக்குதம்மா அத்தமொக்க வெள்ளக்காரே பட்டபாட்ட கேக்கணுமா கட்டபொம்மன் காலத்திலெ கடைவிரிச்ச சட்டைக்காரி விட்டுப்ப்ட்டு ஓடிபுட்டா நட்டுக்குத்தலா நாமிருந்தா ஒட்டுமொத்தமா வாரிப்பிடலாம்