ஆசுகவி
புதுமணம் வீசும் பூக்களுக்காக...
கன்னிகாதானம் கொடுப்போர்தனை
தகப்பன் நிகர் நினைப்பேனெனவும்,
இனியவள் அருகிருக்க எண்ணிலா இன்பம்
இனியென்றும் இருக்கும் என்றெனவும்
புன்சிரிப்பில் உறுதிப்படுத்தும் மணமகனுக்கும்,
கடல்கடந்து வேறுதேசம் போனாலும்
அளவு கடந்த பாசம் வைத்த பெற்றோர் தனை
நினைத்துருக நான் மறவேனெனவும்,
என் மன்னவன் மனம் கோணா
என்றும் நான் நடவேனெனவும்
பார்வையிலே வலியுறுத்தும் மணமகளுக்கும்
என் திருமண நல்வாழ்த்துக்கள்.
"எந்நாடு போனாலும் எந்நாட்டுத் தமிழ் வளர்ப்பீர்; மறவாதீர்"
( ஆசுகவி என்றால் கொடுத்த தலைப்பை
அடுத்த கணத்தில் எழுத துணிவதென்பதாகும்
ஒரு மணவிழாவில் பார்த்தவுடன் எழுதியது
என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன்,
உண்மையிலேயே நமக்கு ஆசு வரலை,
இதை எழுதுவதற்கே சில நாழிகை ஆச்சு.)