பெண் பிரம்மா

நகை அழகாய்
புன்னகை சூடியது
நீ
அணிந்துகொண்டபோது........!!!

பூக்கள்
பிரம்ம மோட்சம் அடைந்தது
உன்
விரல்கள் தீண்டியபோது......!!!

நிலவும் வானும்
ஒளிபெற்றுக்கொண்டது
ஒருமுறை குனிந்து
உன்
விழிகள்பார்க்கையில்.........


பிரம்மித்துப்போகிறான்
பிரம்மா..
உன்னால் எப்படி
முடிகிறதென்று என்று .




கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (2-Jul-14, 4:35 pm)
Tanglish : pen brammaa
பார்வை : 118

மேலே