என்னவன் வேண்டும்...

அவன்...
கார்மேக வண்ணனாய் வேண்டும்.
அரும்பு மீசையுடன் வேண்டும்.
ஆறடி அழகனாய் வேண்டும்.
என் தலை சாய்திட திட தோழுடன் வேண்டும்.
யசோதை மகனாய் வேண்டும்.
பீமனாய் ராமனாய் வேண்டும்.
பெண்ணின் மனதை ரசிப்பவன் வேண்டும்.
பெண்மையை மதிப்பவன் வேண்டும்.
இத்துணை "வேண்டும்" களை நிறைவேற்றதாகினும்,
அவன் என்றும் என்னவனாக மட்டும் இருத்தல் வேண்டும்.