மார்ச் 14....
வினாக்களை எழுப்பி
விடிவுக்கான வழிகளைச
சொன்ன தோழா வாழி நீ !
முதலாளித்துவ
அழுக்கை அகற்றும்
ஆயுதம் தந்தாய் தோழா வாழி நீ !
செத்துப்போன
பிள்ளையை அடக்கம்
செய்ய சவப்பெட்டி வாங்க
பணம் இல்லா நிலையில்
ஏழைக் குழைந்தைகள்
சவப் பெட்டிக்கு
போகாமல் இருப்பதறகான
வழியைச சொன்னாய்
தோழா வாழி நீ !
பணமல்ல ! ஒத்த
மனம் இருந்தால் போதும்
இணையருக்கு
ஈடில்லா புகழை
ஈட்டலாம் மண்ணில்
என தோழர் ஜென்னியோடு
வாழ்ந்து மறைந்த
எம் தோழா வாழி நீ !
உழைக்கும் கரங்கள்
அத்தனையும் வானில்
கையை உயர்த்தி
வீர வணக்கம் சொல்லும்
எமது தோழா காரல் மார்க்சே !
என்றும் உன் புகழ் வாழி !
வா. நேரு