மனதை உலுக்கிய பேரிடர்

மனதை உலுக்கிய பேரிடர்.....

பட்டினியாக இருப்பதை நினைந்து
விட்டத்தை பார்த்து இருந்த இவர்கள்
பட்ட அடி கொஞ்சமல்ல
பட்டிணத்தில் பிழைப்பை தேடிய இவர்கள் ...

கட்டிட தொழிலாளியாய் மாறிய இவர்கள்
கட்டிய கட்டிடங்கள் உயர்ந்தனவே
பட்டக் கஷ்டம் கொஞ்சமல்ல
கட்டிடம் வானம் நோக்கி வளர்ந்தனவே ...

கட்டிய வீட்டில் அனைவரும் இருந்து
பேரிடர் இரவில் நடந்து விட்டால்
பட்டியலிட்டு மனித நாமங்கள்
விட்டில் பூச்சிகளாய் பலர் இறந்திருப்பாரென ...

கட்டிய கட்டிடம் என்ன நினைத்ததுவோ
கட்டிடம் தான் வலிமைஅற்று இருந்த காரணத்தினால் ...
கொட்டித்தீர்த்த மழையில் தன்னை
கட்டிடம் தான் இடிந்து விழுந்ததுவே ...

சுற்றமே அழுது தீர்த்தனரே
இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களைக் கண்டு
மீதமுள்ளோர் அவர்களை மீட்டிடவே
உலகெலாம் கதறிய நெஞ்சங்கள் கொஞ்சமல்ல ..

ஏன் இந்த ஆசை மனிதருக்கு
பல மாடி கட்டிடங்களில் குடியிருப்பதற்கு
பேராசைக் கொண்ட வணிகர்களின் ( Seller )
வீசிய வலைகளில் விழுவதற்கு ...

மானிடமே இங்கே யோசியுங்கள்
வஞ்சகர்களின் பின்னால் செல்லாதீர்கள்
அவர்களின் பண ஆசையினால்
விழுந்தது கட்டிடம் மட்டுமல்ல
அதனுடன் உங்களின் கனவுகளும் தான் ...

ந தெய்வசிகாமணி

எழுதியவர் : ந தெய்வசிகாமணி (3-Jul-14, 6:32 am)
பார்வை : 118

மேலே