உனக்காக
மெல்லிய புன்னகையில் வன்மங்களின்றி
உருவாக்கி சென்றாய் புயலை!
அதில் தொலைந்த என் மனதினை
இன்றுவரை எனக்கு திரும்ப
கிடைக்காமலேயே செய்து விட்டாய் !!
உன்னிடம் இருப்பதை வருடங்கள் கடந்து
அறிந்து கொண்டாலும்; என் மனதை கேட்க
எனக்கே உரிமையில்லா இடத்தில் நிற்கிறேன்
சிறைப்பட்டு!!
அருகில் இருந்தும் வதைத்து கொண்டிருக்கிறாய்
மெளனமென்னும் அரிதாரம் பூசிக் கொண்டு!
எதுவரை நீட்டித்து விட போகிறதென்ற
என் கர்வங்களையும் நொறுங்க வைத்து
கொண்டு தானே நிற்கிறாய்!
விலகி விட முயன்றாலும்
கனவிலும் கற்பனையிலும்
உன் முகம்!
மரணத்தின் வலிகளை உயிரோடு
தந்து புதைத்து கொண்டிருக்கிறாய்!
மனம் உன்னிடமிருந்தும், வலிகள் மட்டும்
எனக்கான பரிசா ?? வாழ்வா ???
எதை தொடர போகிறது
என் காத்திருப்புகள்??!
விடையில்லா கேள்விகளுடன்
விடை கிடைக்குமென்ற நம்பிக்கையில்
கற்பனைகளைக் கொண்டு காத்திருக்கிறேன்
உனக்காக!!